மனிதர்களால் இன்றளவும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சில நோய்களில் நாய் கடியால் பரவும் ரேபிஸ் நோயும் (Rabies Disease) ஒன்று ஆகும். சென்னை திருவொற்றியூரில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஆனது 29 பேர்களை துரத்தி துரத்தி கடித்துள்ள சம்பவம் ஆனது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரே நாளில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஆனது பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை ரேபிஸ் கடித்திருக்கிறது. இது மீண்டும் ரேபிஸ் நோயின் அச்சத்தை சென்னை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :
- மக்களிடையே Rabies Disease குறித்த விழிப்புணர்வு வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
- ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் பட்டால் கூட அலட்சியமாக இருக்கக்கூடாது. இந்த Rabies Disease வந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்த முடியாது.
- ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த ரேபிஸ் நோயிலிருந்து தப்பிக்க முடியும். மக்களிடையே இந்த ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதால் நாய் கடித்தாலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
Rabies Disease - ஒரு குறிப்பு :
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த நாய் ஆனது யாருக்கும் கட்டுப்படாது. தனக்கு சோறு போட்டு வளர்த்தவர்கள் கூப்பிட்டால் கூட கண்டு கொள்ளாது. அதேபோல அந்த நாயின் கீழ் தாடைகள் ஆனது எப்போதும் தொங்கிக்கொண்டே இருக்கும். அந்த தாடையிலிருந்து எச்சில் ஒழுகியபடியே இருக்கும். அது மட்டுமல்லாது அந்த நாய் ஆனது யாரை பார்த்தாலும் துரத்தி துரத்தி கடிக்கும். சாதரண நாய்கள் இது போல இப்படி துரத்தி துரத்தி கடிக்காது.
இந்த ரேபிஸ் நோய் தாக்கிவிட்டால் அந்த Rabies Disease ஆனது நாயின் மூளையழற்சியை ஏற்படுத்தி அந்த நரம்பு மண்டலத்தை முழுவதுமாக தனது கண்ட்ரோலில் எடுத்துக்கொள்ளும். இப்படி வைரஸ் நோய் தாக்கப்பட்ட நாய் ஆனது 10 நாளில் இறந்துவிடும். எனவே 10 நாள் கால கட்டத்தில் இந்த வைரஸ் ஆனது மற்றொரு உடலில் புகுவதற்காக நாயை உசுப்பேற்றி மற்றவர்களை கடிக்க வைக்கும். இவ்வாறு கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது மற்ற நாய்களின் உடலில் வைரஸ் புகுந்து தனது வாழ்க்கையை தொடரும். பின்னர் வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் உயிரிழந்துவிடுவார்கள். ஆனால் அந்த மற்றவர்கள் அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் மற்றொரு உடலை கடித்து வைத்துவிட்டுதான் போவார்கள். இதுதான் ரேபிஸ் நோய் ஆனது பரவுகின்ற முறை ஆகும்.
இந்த ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாய் கடித்தவுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை :
இந்த ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாய் கடித்தவுடன் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ரேபிஸ் வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய் நக்கினாலே நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இந்த ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாயின் எச்சில் ஆனது மனிதர்களின் ஆறாத காயங்கள் மீது படும்போது ரேபிஸ் நோய் பரவும். எனவே தெருநாய்கள் நக்கினால் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த நாய்க்கு ரேபிஸ் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதியுங்கள் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
திருவொற்றியூர் சம்பவத்தை தொடர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஆனது தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. சென்னையில் தற்போது இந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 1,427 தெரு நாய்களை பிடித்து, அதில் 1,182 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த 3 நாட்களில் ராயபுரத்தில் சுற்றித்திரிந்த 83 நாய்கள் பிடிக்கப்பட்டு, 21 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 31 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.