Gistak Media

Raghava Lawrence Latest Tweet : ரஜினியின் ஜெயிலர் குறித்து ராகவா லாரன்ஸ் புகழாரம்...

Raghava Lawrence Latest Tweet :

“எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய உற்சாகத்தை ஜெயிலரும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பாட்ஷாவை விட டபுள் ஹிட் ஆகும்” என்று ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலரைப் பார்த்து ராகவா லாரன்ஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயிலர் பட ஷோகேஸைப் பார்த்த பின் ஒரு ரஜினி ரசிகனாக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய அதே உற்சாகத்தை இதுவும் ஏற்படுத்தியது. இந்தப் படம் பாஷாவை விட டபுள் ஹிட் ஆகும். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இப்படிபட்ட கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தியதற்கு நெல்சன் மற்றும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. அனிருத்தின் அற்புதமான இசை, ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடித்து வரும் ஜெயிலர் திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சும், அவர் கூறிய சிறுகதையும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இப்படத்தின் டிரைலர் வெளியான அரை மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ள இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top