Gistak Media – Cinema News | Trending News | Latest News

Railway Group D Jobs : இரயில்வேயில் குரூப் டி பிரிவில் 22000 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் குரூப் D (Railway Group D Jobs) பிரிவில் 22,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த குரூப் டி தேர்வுகளில் எப்பொழுதும் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதால் இந்திய ரயில்வே நடத்தும் இந்த குரூப் டி தேர்வுகளுக்காக ஆண்டுக்கணக்கில் தேர்வர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டே வருகிறார்கள். குரூப் டி பணியிடங்களுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை, கல்வி தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Level 1 (Group D) பட்டியல் விவரங்கள்

  • உதவியாளர் (Track Machine) – 600
  • உதவியாளர் (Bridge) – 600
  • தண்டவாள பராமரிப்பாளர் (Group IV) – 11000
  • உதவியாளர் (P-way) – 300
  • உதவியாளர் (TRD) – 800
  • உதவியாளர் Loco Shed (Electrical) – 200
  • உதவியாளர் Operations (Electrical) – 500
  • உதவியாளர் (TL & AC) – 50
  • உதவியாளர் (C & W) – 1000
  • உதவியாளர் B – 5000

கல்வி தகுதி விவரங்கள்

  • Matriculation/ SSLC/ 10th pass
  • ITI (குறிப்பாக National Council for Vocational Training (NCVT) மற்றும் State Council for Vocational Training (SCVT))
  • National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

மாதச்சம்பளம் விவரங்கள் (Railway Group D Jobs)

  • இந்த குரூப் டி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,800/- மாதச்சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

  • Computer Based Test (CBT)
  • Physical Efficiency Test (PET)
  • Certificate Verification (DV)
  • Medical Examination (ME)

வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள்

  • இந்த குரூப் டி தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் மற்றும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Railway Group D Jobs - Gistakmedia

வயது தளர்வு விவரங்கள்

  • SC/ST – 5 years,
  • OBC – 3 years,
  • PwBD (Gen/EWS) – 10 years,
  • PwBD (SC/ST) – 15 years,
  • PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டண விவரங்கள்

  • Minority Communities மற்றும் Economically Backward Class (EBC), SC, ST, Female, PWD, Transgender, Ex-servicemen பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் 250/- செலுத்த வேண்டும்.
  • மற்ற பிரிவினர் அனைவரும் 500/- செலுத்த வேண்டும்.

குரூப் டி தேர்வு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை

  • இந்த குரூப் டி தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 21.01.2026 முதல் 20.02.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top