இந்திய ரயில்வே துறை ஆனது தற்போது தெற்கு மத்திய ரயில்வே (SCR) 2801 அப்ரண்டிஸ் (Railway Notification 2026) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை 2026 மார்ச் 11 அன்று வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு பொற்கால வாய்ப்பாக கருதப்படுகிறது.
அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு விவரங்கள்
தெற்கு மத்திய ரயில்வே துறையில் உள்ள கீழ் காணும் தொழில்நுட்ப பிரிவுகளில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான விவரங்கள்,
- Fitter – 539
- Electrician – 1258
- Welder – 202
- Painter – 32
- Diesel Mechanic – 105
- AC Mechanic – 251
- Electronics Mechanic – 88
- Carpenter – 22
- COPA – 181
- Industrial Electronics – 33
- Machinist – 54
- MMTM – 24
- Motor Mechanic – 12
ஸ்டைபெண்ட் மற்றும் சலுகை விவரங்கள்
- 1 வருட பயிற்சி காலத்தில் மாத ஸ்டைபெண்ட் Rs. 7,000 முதல் Rs. 8,500 வரை (10ஆம் வகுப்பு/ITI அடிப்படையில்) வழங்கப்படும்.
- இலவச ரயில் பயணம், தங்குமிடம், மற்றும் உணவு சலுகைகள் வழங்கப்படும்.
- ரயில்வே வேலைக்கான முன்னுரிமை, ESI/PF கவர் வழங்கப்படும்.
- பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் (Railway Notification 2026) மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு பெறும் சலுகை உண்டு.
- தமிழ்நாடு/ஆந்திரா/தெலுங்கானா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித்தகுதி (Railway Notification 2026)
- 10ஆம் வகுப்பில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தொழிற்பிரிவுக்கு ஏற்றவாறு ITI (NCVT/SCVT)-ல் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். குறைந்தது 1 வருட பயிற்சி பெற்றவர்களாக (Railway Notification 2026) இருக்க வேண்டும். Apprenticeshipindia.gov.in இல் RDAT/NAPS ரெஜிஸ்ட்ரேஷன் எண் முக்கியம் ஆகும்.
- COPA-க்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி திறன் போதுமானது.
வயது வரம்பு விவரங்கள்
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு ஆனது வழங்கப்படும்.
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு ஆனது வழங்கப்படும்.
- குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 24 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி கீழ் காணும் தளர்வுகள் ஆனது வழங்கப்படும்.
- PwD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வு ஆனது வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
- Merit List Verification மற்றும் Document Verification செய்யப்படும்.
- எழுத்துத் தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வும் இல்லை.
விண்ணப்ப கட்டண விவரங்கள்
- SC/ST, PWD, மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- மற்றவர்கள் Rs.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தொடக்க தேதி – 12.03.2026.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 11.04.2026.
விண்ணப்பதாரர்கள் தெற்கு மத்திய ரயில்வே (SCR) 2801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.