பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் ஜனவரி 9-ல் வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் ஆனது பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், பான் இந்தியா லேபிள் போன்ற சிறப்புக்கள் இருந்தாலும், உள்ளடக்கம் சரியாக இல்லையென்றால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் (Raja Saab Movie Review) என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.
'தி ராஜா சாப்' படத்தின் நட்சத்திர பட்டாளம்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், ஜரீனா வஹாப், சத்யா, விடிவி கணேஷ், பிரபாஸ் ஸ்ரீனு, சப்தகிரி மற்றும் சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் பாலனியின் ஒளிப்பதிவு மற்றும் தமனின் இசை பாராட்டும் விதத்தில் அமைந்து (Raja Saab Movie Review) உள்ளது. கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங் செய்துள்ளார். டி.ஜி. விஸ்வ பிரசாத் பீப்பிள்ஸ் மீடியா பேக்டரி சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
புதிய லுக்கில் அனைவரையும் கவரும் பிரபாஸ் (Raja Saab Movie Review)
காதல், காமெடி, ஹாரர் மற்றும் அதிரடியான திருப்படங்களுடன் திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமாக வெளியாகி இருக்கும் இப்படத்தில் பிரபாஸ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது புதிய லுக் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பது போல உணரப்படும் திரைக்கதை
ஒரு சிறு ஊரில் வசிக்கும் பிரபாஸ் நினைவாற்றல் இழப்பால் அவதிப்படும் தனது பாட்டியின் கணவரை தேடி பெரிய நகரம் மற்றும் காட்டில் உள்ள அரண்மனை வரை பயணிக்கிறார். அங்கு அமானுஷ்ய சக்திகள் மற்றும் சொத்து தொடர்பான சதிகளை சந்திக்கிறார். இப்படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள் (Raja Saab Movie Review) அதிகமான அளவில் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் கதை பல இடங்களில் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பது போல உணரப்படுவதால் முதல் பாதி சோதனையாக மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதி ஓரளவு காமெடி மற்றும் பரபரப்பான கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. இரண்டாம் பாதி மட்டுமே படத்தின் முக்கிய பலமாக சொல்லலாம். படத்தின் முதுகெலும்பாக மற்றும் மிரட்டலாக பின்னணி இசை உள்ளது. “வாவ்” என சொல்லும் விதத்தில் கிளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசை உள்ளது.
பிரபாஸ் தனது நடிப்பால் அனைவரையும் டாமினேட் செய்துள்ளார்
பிரபாஸ் கதாநாயகனாக நினைவாற்றல் இழப்பால் அவதிப்படும் தனது பாட்டியுடன் வசிக்கும் ராஜுவாக நடித்துள்ளார். பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக், துடிப்பு மற்றும் எனர்ஜி எல்லாமே சிறப்பாக இருக்கிறது. பிரபாஸ் தனது சிறப்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் (Raja Saab Movie Review) தன் பக்கம் திருப்பியுள்ளார். இப்படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகிய மூவரும் கவர்ச்சியில் எந்தக் குறையும் வைக்காமல் நடித்துள்ளனர். வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் சிறப்பாக நடித்துள்ளார். காமெடி காட்சிகளில் சத்யா, விடிவி கணேஷ், மற்றும் பிரபாஸ் ஸ்ரீனு ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஜரீனா வஹாப் தனது பாட்டி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். சிறிது நேரம் வந்தாலும் சமுத்திரக்கனி கங்கராஜுவாக தன் பங்கை நன்றாக உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புகள் என்ன?
- காதல், காமெடி மற்றும் ஹாரர் என எல்லாம் சரியான அளவில் கலந்து இப்படம் உருவாக்கப்படவில்லை. அதனால் காதல், காமெடி மற்றும் ஹாரர் என மூன்றிலும் தோல்வி அடைந்த படமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஒரு ஊர், ஒரு ஒதுக்குப்புற பேய் பங்களா, அதற்குள் மூன்று ஹீரோயின்களுடன் ஜாலியாக பிக்னிக் போகும் பிரபாஸ்.
- பேய் படமா?, காமெடி படமா?, லவ் ஸ்டோரியா? என்றே தெரியவில்லை.