Gistak Media

Rajinikanth's Coolie Movie Releasing Worldwide : ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவான கூலி திரைப்படம் நாளை (Rajinikanth’s Coolie Movie Releasing Worldwide) உலகம் முழுவதும் வெளியாகிறது. ரஜினிகாந்தின்  முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி வெளியானது. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கூலி திரைப்படம் நாளை ஆகஸ்டு 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர்,  மற்றும் விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா,  உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், மற்றும் அமீர்கான் என பல முன்னனி  நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இது அவரது 50 ஆண்டு கால திரைஉலக பயணத்தை சிறப்பிக்கும் ஒரு வெளியீடு ஆகும்

உலகளவில் கூலி திரைப்படம் முன் பதிவில் பல சாதனைகள்

Rajinikanth's Coolie Movie Releasing Worldwide - Gistakmedia

கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதைத்  தொடர்ந்து முன் பதிவில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை நடந்த முன்பதிவில் மட்டுமே ரூ.85 கோடி ரூபாய் (வசூல்) கலெக்க்ஷன் ஆகியுள்ளது.

வட அமெரிக்காவில் தற்போதுவரை  நடைபெற்ற முன் பதிவு ப்ரிமியரில் மட்டுமே 2 மில்லியன் வசூல் கலெக்க்ஷன் ஆகியுள்ளது. இதற்கு முந்தைய கபாலி திரைப்படத்தின் 1.9 மில்லியன் வசூல் கலெக்க்ஷன் சாதனையை இத்திரைப்படத்தின் வசூல் முறியடித்துள்ளது.

ஜெர்மனியில் 10,000-க்கும் மேல் டிக்கெட்ஸ் விற்பனை ஆகி முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்திற்கு சிறந்த டிக்கெட் விற்பனை சாதனையை பெற்றுள்ளது. இத்தாலி நாட்டிலும் சிறந்த டிக்கெட் விற்பனை சாதனையை பெற்று நல்ல மார்க்கெட்டுடன் நாளை(Rajinikanth’s Coolie Movie Releasing Worldwide) ஓபன் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கூலி திரைப்படத்தின் சிறப்பம்சங்கள் (Rajinikanth's Coolie Movie Releasing Worldwide)

இத்திரைப்படத்தில் அமீர்கான் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரே ஒரு பாடலுக்காக பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். மேலும் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா நடித்துள்ளார். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நாளை (Rajinikanth’s Coolie Movie Releasing Worldwide) வெளியாகவிருக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top