Rakshabandhan Story and History: ரக்ஷாபந்தன் கதை மற்றும் வரலாறு
ரக்ஷா பந்தன் (Rakshabandhan Story and History)என்பது வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு இந்து சமயப் பண்டிகையாகும். இது குறிப்பாக சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பாசத்தையும் போற்றி பாதுகாக்கும் சிறப்பு மிக்க பண்டிகையாகும்.
இந்த ரக்ஷா பந்தன் ஆனது ஆவணி மாதத்தில் வரும் பெளர்மணி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வைக்கையும் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியையும் வேண்டி பிரார்த்தனை செய்து சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டுவார்கள். சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு சிறந்த பரிசுகள் வழங்கி தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள். மேலும் வாழும் காலம் முழுவதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்கின்றனர்.
இந்த ரக்ஷா பந்தன் ஆனது சொந்த சகோதர சகோதரிகளுக்கு மட்டுமல்லாமல் தாங்கள் சகோதர உணர்வுகளோடு பழகும் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் வசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ரக்ஷா பந்தன் கயிறை ஏற்றுக் கொள்வதன் மூலம் சகோதர சகோதரி பாசம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த ரக்ஷா பந்தன் கயிறை கட்டும் அன்புச் சகோதரிக்கு பணம் அல்லது ஒரு பரிசு சகோதரன் அளிப்பது வழக்கம். இது சகோதர சகோதரி உறவை போற்றும் மற்றும் வளர்க்கும் ஒரு சமுதாயப் பண்டிகை(Rakshabandhan Story and History) என்று கூறுவதே மிகவும் பொருந்தும்.
தற்போது இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. தென்னிந்தியாவில் உள்ள சின்னச் சின்ன கடைகளில் கூட வண்ணமயமான ராக்கி கயிறுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான வரலாற்று காரணம் (Rakshabandhan Story and History)
மகாபாரத போரில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டு வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, பாண்டவர்களின் மனைவியான திரௌபதி தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டினார். கிருஷ்ணர் திரௌபதியின் பாசத்தை மதித்து தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா ஆபத்துகளிருந்தும் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
அதுவே பின்னாளில் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று திரௌபதியை துகிலுரியும் நிலை ஏற்பட்ட போது கிருஷ்ணர் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார். கிருஷ்ணர் தான் அளித்த உறுதியைக் காப்பாற்றினார். அந்த நிகழ்வு இன்று ரக்ஷாபந்தன் விழாவாக போற்றப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!