-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Rambutan Fruit Benefits : ரம்பூட்டான் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ரம்பூட்டான் பழம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை தாயகமாக கொண்டது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், வைட்டமின் C, நியாசின், கலோரிகள், இரும்புச்சத்து, புரதம் (Rambutan Fruit Benefits) ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் ரம்பூட்டான் பழத்தின் மேற்பகுதி முட்களுடன் இருந்தாலும், இந்த பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் ரம்பூட்டான் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரம்பூட்டான் பழத்தின் நன்மைகள் (Rambutan Fruit Benefits)
ஊட்டச்சத்து நிறைந்தவை
ரம்பூட்டான் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் ரம்பூட்டான் பழத்தில் தாமிரம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இது இரத்த அணுக்களை பராமரிப்பதற்கும் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் முக்கியமானவையாகும்.
செரிமானம் மேம்பட
ரம்பூட்டான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது விரைவாக செரிமானத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் (Rambutan Fruit Benefits) உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீங்கள் தினசரி உணவில் ரம்பூட்டானை சேர்த்து வந்தால் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
ரம்பூட்டானில் கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் இதய நோய் அபாயத்தை குறைக்கவும் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் ரம்பூட்டான் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பாதுகாப்பதிலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆற்றலை அதிகரிக்கும்
ரம்பூட்டான் கார்போஹைட்ரேட்டின் சிறந்த மூலமாகும். மேலும் இந்த கார்போஹைட்ரேட் உடலின் முதன்மை ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. மேலும் இந்த பழத்தின் அதிக நீர் உள்ளடக்கம் நாள் (Rambutan Fruit Benefits) முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?