Gistak Media

Ramjan 2026 : ரம்ஜான் பண்டிகை என்றால் என்ன? அதன் வரலாறும் கொண்டாட்டமும் முழு தகவல்.!

இஸ்லாமிய நாட்காட்டி ஆனது சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட  ஒரு நாட்காட்டி (Ramjan 2026) ஆகும். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு (விரதம்) இருக்கும் இந்த இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதம் ஆனது ரம்ஜான் (ரமலான்) என்று அழைக்கப்படுகிறது. இந்த ரம்ஜான் நோன்பு ஆனது இஸ்லாமியர்கள் மேற்கொள்கின்ற புனிதமான உண்ணாவிரதமாகும். இந்த ரம்ஜான் நோன்பு ஆனது நோன்பு நோற்று, வழிபாடு, தர்மம், மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் காலமாகும். இந்த ரம்ஜான் (ரமலான்) மாதம் முழுவதும் ஆண்கள்,  மற்றும் பெண்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு உண்ணாமல், நீர் பருகாமல் புனித நோன்பு (விரதம்) இருப்பது வழக்கம். முஸ்லிம்கள் அனைவரும் இந்த நோன்பு நோற்பதன் மூலம் ஏழைகளின் பசி மற்றும் தாகத்தின் துயரத்தை உணர்ந்து இறைவனுக்கு நெருக்கமானவர்களாக தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒரு மிகச் சிறந்த ஆன்மீக பயணமாகும்.

ரம்ஜான் நோன்பின் வரலாறு

ரம்ஜான் மாதத்தின் வரலாற்று முக்கியத்துவமானது Quran உடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த மாதத்தில்தான் முஹம்மது நபிகள் அவர்களுக்கு முதல் முறையாக முதல் Quran வெளிப்பாடு கிடைத்தது. இந்த ரம்ஜான் நோன்பு மாதம் முதல் முறையாக கி.பி. 624ல் மதீனாவில் தொடங்கியதாக கூறப்படுகிறது.​ இது ஹிரா மலையில் உள்ள ஒரு குகையில் நபிகள் நாயகம் தியானம் செய்தபோது, தேவதை ஜிப்ரீல் மூலம் குர்ஆனின் முதல் வசனங்கள் அவருக்கு அருளப்பட்டதாக (Ramjan 2026) கூறப்படுகிறது.​ அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த ரம்ஜான் மாதம் கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் நோன்பின் முக்கியத்துவம் (Ramjan 2026)

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பின்பற்றும் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக இந்த ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. அதாவது,

  1. கலிமா கொள்தல் (இறை ஒருமை நம்பிக்கை)
  2. தொழுகை செய்தல்
  3. நோன்பு மேற்கொள்தல் (ரம்ஜான்)
  4. ஜக்காத் செய்தல் (தர்மம்)
  5. ஹஜ் மேற்கொள்தல் (காபா தரிசனம்)

ஆகிய ஐந்து கடமைகளில் தொழுகைக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக இந்த ரம்ஜான் நோன்பு (Ramjan 2026) ஆனது கருதப்படுகிறது.​ இந்த ரம்ஜான் நோன்பின்போது உடல் தாகத்தை கட்டுப்படுத்துதல், உணவு மற்றும் பிற ஆசைகளைக் கட்டுப்படுத்துதல், பிறர்க்கு உதவி செய்தல், இறைவன் மீது அதிக நம்பிக்கை கொள்தல் ஆகிய ஆன்மீக பண்புகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

Ramjan 2026 - Gistakmedia

ரம்ஜான் கொண்டாடப்படும் வழிமுறைகள்

  • முஸ்லிம்கள் அனைவரும் இந்த ரம்ஜான் நோன்பு மாதத்தின்போது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உணவு உண்ண வேண்டும். இது சஹர் (Suhur) ஆகும். அதே போல் மாலையில் சூரியன் மறைந்த பின் உணவு உண்ண வேண்டும். இது இப்தார் (Iftar) ஆகும். இப்தார் (Iftar) என்பது மாலையில் சூரியன் மறைந்த பின் நோன்பு திறக்கும் (Ramjan 2026) உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
  • ரம்ஜான் மாதத்தில் இரவு நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ‘தராவிஹ்’ (Tarawih) எனப்படும் சிறப்புத் தொழுகைகளை மசூதிகளில் மேற்கொள்கின்றனர்.
  • முஸ்லிம்கள் இந்த ரம்ஜான் மாதத்தில் ஏழைகளுக்கு உணவளித்தல் மற்றும் ஜகாத் (தர்மம்) வழங்குதலில் ஈடுபடுகின்றனர். இதை ஒரு மிக முக்கியமான கடமையாக கருதுகின்றனர்.
  • இந்த ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் ஈத்-உல்-பித்ர் பெருநாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் அன்று காலையில் புது ஆடைகள் அணிந்து, மசூதிகள் அல்லது திறந்த வெளியில் சிறப்புத் தொழுகை நடத்துகின்றனர்.
  • ஈத்-உல்-பித்ர் பெருநாள் சிறப்புத் தொழுகைக்கு பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இந்த ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் சுவையான உணவுகள் சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்கிறார்கள்.

ரம்ஜான் நோன்பு விதிவிலக்கு பெறுபவர்கள்

  • நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த ரம்ஜான் நோன்பை தவிர்க்கலாம்.
  • முதியவர்கள், நீங்காத நோய் உள்ளவர்கள், பைத்தியக்காரர்கள், மற்றும் பருவமடையாத குழந்தைகள் இந்த ரம்ஜான் நோன்பை தவிர்க்கலாம்.

ஆன்மீக சுத்திகரிப்பு, தன்னடக்கம், பக்தி, மற்றும் தர்மம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த ரம்ஜான் நோன்பு மாதம் விளங்குகிறது. இந்த ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக தொழுகைகள் (Prayer) செய்து, குர்ஆன் வாசிப்பு மற்றும் ஆன்மீக சிந்தனைகளை மேற்கொள்கின்றனர்.


Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top