ஹூப்ளி KSCA ஸ்டேடியத்தில் பிப்ரவரி 24 முதல் 28 வரை நடைபெற்ற கர்நாடகா vs ஜம்மு-காஷ்மீர் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி வரலாற்று (Ranji Trophy 2026) வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீநகர் தெருக்களில் மக்கள் பட்டாசு மழை பொழிந்து மகிழ்ந்தனர். பள்ளி மாணவர்கள் தங்கள் உற்சாகத்தை நாங்களும் கிரிக்கெட் ஆடுவோம் என ஆரவாரமாக வெளிப்படுத்தினர்.
முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர்வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி ஆனது பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 584 ரன்களை குவித்தது. அதன் பின் முதல் இன்னிங்சை விளையாடிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. ஜம்மு-காஷ்மீர் அணி 2வது இன்னிங்சை 291 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்து தனது 2வது இன்னிங்சை (Ranji Trophy 2026) டிக்ளேர் செய்தது. ஜம்மு-காஷ்மீர் அணி ஆனது மொத்தமாக 633 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், கர்நாடகா அணிக்கு 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை எட்டுவது மிகவும் கடினம் என்பதால் போட்டியை டிராவில் முடிக்க இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் ஜம்மு-காஷ்மீர் அணி ஆனது முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டது. கேப்டனின் சிறந்த மன உறுதி மற்றும் அமைதியான வழிநடத்தல் தான் அணியை இந்த வெற்றிக்கு கொண்டு சென்றது.
இந்த வெற்றி தேசிய அணிக்கான தேர்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் (Ranji Trophy 2026)
முதல் முறையாக 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் அணி ரஞ்சிக்கோப்பையை வென்று வரலாறு படைத்திருப்பது நம்ம ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணமாக அமைந்துள்ளது. மேலும் பாரம்பரிய ஆதிக்க அணிகளுக்கு சவால் விடும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய தேசிய அணிக்கான தேர்விலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என (Ranji Trophy 2026) எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லி, மும்பை மற்றும் கர்நாடகா போன்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தற்போது வடக்கு மண்டலத்தில் ஒரு புதிய சக்தி மையம் உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் Talent Pool விரிவடையும். தேசிய அணிக்கான கதவு நன்றாக திறக்கும்.
ஷுப்ஹாம் புண்டிர் மேன் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார்
ரஞ்சி டிராபி 2025-26 இறுதிப்போட்டியில் ஷுப்ஹாம் புண்டிர் (Shubham Pundir) மேன் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஆனது ஜம்மு காஷ்மீர் அணியின் சிறந்த மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இந்தப் பகுதியில், வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி ஆனது பல இளம் விளையாட்டு வீரர்கள் (Ranji Trophy 2026) பெரிய கனவுகளைக் காணவும் மேலும் அதிக அளவில் விளையாட்டுகளில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும்.
வெற்றி பெற்ற அணிக்கு 2 கோடி பரிசு
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு அறிவித்துள்ளார்.