-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
Ranji Trophy Record : அதிவேக முச்சதம் அடித்து சாதனை | ஹைதராபாத் வீரர் அபாரம்
Ranji Trophy Record :
ரஞ்சி போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் வரலாற்று சாதனை படைத்தார். அவர் டிரிபிள் சதம் அடித்து எதிரணியான அருணாச்சல பிரதேசத்தை தூக்கி வீசினார். பல ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருந்த அதிவேக இரட்டை சதம், அதிவேக டிரிபிள் சதம் (Ranji Trophy Record) என்ற சாதனைகளை முறியடித்தார். இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையிலான ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம். முதலில் பேட் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பேட்டிங் முடிந்ததும் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் கேப்டன் ராகுல் சிங் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து கத்துகுட்டி அணியான அருணாச்சல பிரதேசத்தின் பந்துவீச்சை அழித்தனர். ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் எடுக்க முடிவு செய்தனர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் எடுத்தார். ஆனால் தன்மய் அகர்வால் நிலைத்து நின்று அதிரடியை தொடர்ந்தார்.
119 பந்துகளில் பவுண்டரிகள், சிக்சர்கள் விளாசி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் (உள்நாட்டு டெஸ்ட் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் உட்பட) அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் தனது அதிரடியை தொடர்ந்த அவர் 147 பந்துகளில் முச்சதம் (Ranji Trophy Record) அடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் 2017-ல் 191 பந்துகளில் மும்முறை சதம் அடித்ததே சாதனையாக (Ranji Trophy Record) இருந்தது. அதை முறியடித்தார் தன்மயி அகர்வால். மேலும் ஒரே நாளில் 300 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் இரண்டாவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவர் தனது இன்னிங்ஸில் 33 பவுண்டரிகள் மற்றும் 21 சிக்ஸர்களை அடித்தார். அவர் 21 சிக்ஸர்களை அடித்து இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் இஷான் கிஷன் 14 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்துள்ளது. அதற்கு முன் 172 ரன்கள் குவித்திருந்த அருணாச்சல பிரதேசம் ஒரே நாளில் 701 ரன்கள் குவித்துள்ளது. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 700 ரன்களுக்கு மேல் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 1948ல் ஆஸ்திரேலிய மற்றும் எசெக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரே நாளில் 721 ரன்கள் குவிக்கப்பட்டது.
Latest Slideshows
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?
-
CRPF Recruitment 2026 : மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..
-
IPL 2026 KKR vs LSG : கடைசி பந்தில் லக்னோ ‘த்ரில்’ வெற்றி..
-
Chennai Property Hotspots 2026 : சென்னையில் எங்கு முதலீடு செய்யலாம்?
-
DC vs GT IPL 2026 Highlights : கடைசி பந்து வரை திரில்லர்..