Rathnam Trailer : விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ரத்னம் படத்தின் ட்ரெய்லர் (Rathnam Trailer) வெளியாகியுள்ளது. நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள ரத்னம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஷாலும், இயக்குநர் ஹரியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இதற்கு முன் தாமிரபரணி, பூஜை படங்களில் இணைந்த இந்த கூட்டணி, ரத்னம் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அதிரடியாக இணைந்துள்ளது. நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எஸ்.ஜே.சூர்யா-விஷால் கூட்டணியில் உருவாகியிருந்த படத்தை மிகச்சிறப்பாக கொடுத்திருந்தார். காலப்பயணத்தை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.
Rathnam Trailer :
ரத்னம் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு (Rathnam Trailer) வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மார்க் ஆண்டனியில் இருந்து ரத்தினமாக மாறியது மிகப்பெரியது என்றும் அவர் கூறினார். இயக்குனர் ஹரியுடன் தான் இணையும் மூன்றாவது படம் ரத்னம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை படங்கள் வெளியானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், படத்தின் காட்சிகளும், கதைக்களமும் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறார் விஷால். இப்படத்தில் நாயகி பிரியா பவானி சங்கரை காக்கும் வகையிலும், விஷால் கையில் அரிவாளை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். இதற்கிடையில், இந்த படத்தில் பல கெட்ட வார்த்தைகள் இருப்பதை இந்த ட்ரெய்லர் (Rathnam Trailer) மூலம் உணர முடிகிறது. எல்லோரும் சரமாரியாக கெட்ட வார்த்தைகள் பேசுகின்றனர். ஹரி படம் என்றாலே அதிரடி ஆக்ஷன் படமாக அமையும். மேலும், அவருடன் விஷால் இணைந்திருப்பதால், இந்தப் படம் நிச்சயம் அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை வெளிப்படுத்தும் வகையில், படத்தின் ட்ரெய்லரில் (Rathnam Trailer) ஆக்ஷன் காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!