Ravindra Jadeja New Record : இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் ஜடேஜா மாபெரும் சாதனை
ராஜ்கோட் :
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதம் (Ravindra Jadeja New Record) அடித்து சாதனை படைத்தாலும், ரசிகர்கள் அவருக்கு எதிராக பல கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா 150 ரன்களைக் கூட எட்டிவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் ரோஹித் சர்மாவும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 131 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும், ஜடேஜாவும், சர்பிராஸ் கானும் பொறுப்பாக விளையாடி அணியைக் கட்டமைத்தனர். இந்த நிலையில் சர்பிராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் தவறான முடிவால் ரன் அவுட் ஆனார். இதனால் ஜடேஜாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது தவிர ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 110 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜடேஜா அபார சாதனைக்கு (Ravindra Jadeja New Record) சொந்தக்காரர்.
Ravindra Jadeja New Record :
அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் குவித்து 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா (Ravindra Jadeja New Record) பெற்றுள்ளார். இதற்கு முன், கபில்தேவ் பேட்டிங்கில் 5248 ரன்களும், பந்துவீச்சில் 434 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். தமிழக வீரர் அஷ்வின் பேட்டிங்கில் 3271 ரன்களும், பந்துவீச்சில் 499 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது ஜடேஜா பேட்டிங்கில் 33 ரன்களும், பந்துவீச்சில் 280 ரன்களும் எடுத்துள்ளார். இந்த தொடரில் ஜடேஜா மேலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இணைவார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!