Raw Banana Benefits: வாழைப் பழத்தை விட வாழைக் காயில் இவ்வளவு நன்மைகளா!!!
நாம் சாப்பிடும் வாழைப் பழத்தை காட்டிலும் வாழைக்காயில் அதிகஅளவு ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. வாழைக்காயில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின்கே, பொட்டாசியம், மெக்னிஷியம், துத்தநாகம், போலிக் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும், ஆண்டி ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது. வாழைக்காயுடன் மிளகு, சீரகம் போன்றவைகளை சேர்த்து சாப்பிடலாம் அவை மேலும் உடலுக்கு நன்மையை சேர்க்கும். வாழைக்காயின் 8 நன்மைகளைப் பற்றி காணலாம்.
Raw Banana Benefits List
- இதய ஆரோக்கியத்திற்கு வாழைக்காய் மிகவும் சிறந்தது. வாழைக்காயில் பொட்டாஷியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதிலுள்ள மெக்னிஷிய சத்து உயர் இரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், இதய குழாய் அடைப்புகள் ஏற்படுவதையும், பக்கவாதம் போன்ற நோய்களையும் தடுத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதய நோய்கள் இருப்பவர்கள் வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி பச்சையாக சாப்பிடுவது நல்லது.
- வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. சர்க்கரை சத்து உள்ளவர்கள் வாழைக்காயை எடுத்து கொள்வதால் சர்க்கரை அளவை அதிகரிப்பதை தடுத்து உடலுக்கு ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் அளிக்கிறது. இதிலுள்ள மருத்துவ பண்புகள் இன்சுலின் ஹார்மோனை தூண்டி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைக் காயை எடுத்துக்கொள்வது நல்லது.
- இரைப்பை, குடல் மற்றும் உணவு குழாய் ஆரோக்கியத்திற்கு வாழைக்காய் சிறந்தது வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் வாழைக்காயில் உள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமான தன்மையை அதிகரிக்கிறது குடல் பகுதியில் தேங்கி இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றச் செய்து குடல் செயல்பாட்டை மேம்படுத்துச் செய்கிறது. குடல் பகுதில் வாழும் ப்ரோபயாடிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரட்சனையை சரி செய்கிறது. முக்கியமாக ஆண்டியாக்சிடன்டுகள் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
- வாழைக்காயில் உள்ள வைட்டமின் சி, இரும்பு சத்து மற்றும் இதிலுள்ள துவர்ப்புச்சுவை இரத்த உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த உற்பத்தியை மேம்படுத்தும்.
- வாழைக்காயில் உள்ள வைட்டமின்கள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிஷியம் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் எலும்பு தொடர்பான பிரட்சனைகள் தீரும். மேலும் வளரும் குழந்தைகளுக்கு வாழைக்காயை உணவாக கொடுத்து வந்தால் மூளை, எலும்பு மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
- வாழைக்காயில் உள்ள வைட்டமின் ஏ கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. கண் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
- வாழைக்காயில் க்ரிடோப்பான் என்னும் அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை சீராக்கி மன அமைதியை ஏற்படுத்துகிறது.
- வாழைக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை உடலில் உள்ள நுண் குறுமிகளின் பெருக்கத்தை தடுத்து, நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.








