-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
RBI Approves Flipkart To Offer Online Loans : ஆன்லைன் மூலம் கடன் வழங்க பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியாவில் சமீபகாலமாக கடன் வழங்கும் பிரிவு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் பாரம்பரியமாக வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நிலைமை முற்றிலும் மாறி தற்போது நிதி சார்ந்து இயங்கும் ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிரபல பங்குச்சந்தை நிறுவனங்களான ஸெரோதா, ஏஞ்சல் ஒன் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட தற்போது கடன் வழங்கும் துறையில் கால் பதித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் ஆர்பிஐ-யிடம் இருந்து ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதற்கான (RBI Approves Flipkart To Offer Online Loans) உரிமத்தை பெற்றுள்ளது.
பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்
இந்தியாவில் வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்படுவதற்கு ‘பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் கடன் வழங்கும் நிறுவனத்தை வால்மார்ட்டுக்கு சொந்தமான Flipkart நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தை தொடங்க உரிமம் கோரி இந்திய ரிசர்வ் வங்கியிடம் கடந்த 2022-ம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் இதற்கு கடந்த மார்ச் மாதம் தான் இந்திய ரிசர்வ் வங்கி பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் இ-காமர்ஸ் பிரிவில் செயல்படும் ஒரு நிறுவனம் கடன் வழங்குவதற்கான அனுமதியை பெறுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இனி பிளிப்கார்ட் நேரடியாக கடன் வழங்கலாம் (RBI Approves Flipkart To Offer Online Loans)
அடுத்த சில மாதங்களில் பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக கடன் வழங்கும் சேவையில் ஈடுபட முடியும். இதற்கு தேவையான ஊழியர்களை பணி நியமனம் செய்யும் வேலைகளில் பிளிப்கார்ட் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் நாம் தற்போது பயன்படுத்தும் பிளிப்கார்ட் செயலி மூலமாகவே வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த பைனான்ஸ் பிரிவு கோரமங்களாவில் தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டணி அமைத்து Super. Money என்ற தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் லோன் வழங்கி வருகிறது. தற்போது ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளதால் இனி பிளிப்கார்ட் நிறுவனமே நேரடியாக கடன் வழங்கும். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் ஷாப்பிங் (RBI Approves Flipkart To Offer Online Loans) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன், ஈஎம்ஐ வசதிகளை இந்நிறுவனமே ஏற்படுத்தி தரும். மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் உலகளவில் தற்போது 36 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் 350 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் வரும் 2026-ம் ஆண்டில் பிளிப்கார்ட் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?