ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா (RBI) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி 15, 2026 அன்று நாடு முழுவதும் உள்ள RBI அலுவலகங்களில் 650 உதவியாளர் பணியிடங்கள் (RBI Assistant Recruitment) நிரப்பப்பட உள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு 2025-2026 ஆண்டுக்கான நியமனமாகும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
உதவியாளர் பணி பற்றிய விவரங்கள்
- பணியின் பெயர் – உதவியாளர்
- மொத்த காலியிடங்கள் – 650
சம்பள விவரங்கள் மற்றும் பயன்கள்
- அடிப்படை சம்பளம் – ரூ.29,000/- .
- அடிப்படை சம்பளம் ஆனது ரூ.78,640 வரை உயரும். அசிஸ்டன்ட்டின் முதல் மாத சம்பளம் சுமார் ஆனது ரூ.58,514 (HRA உட்பட).
- கூடுதலாக DA, HRA, பயணச் சேவை, மருத்துவம், மற்றும் ஓய்வூதியம் போன்ற பலன்கள் உண்டு.
வயது வரம்பு பற்றிய விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 1, 2026 அடிப்படையில் வயது 20 முதல் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். (அதாவது, பிப்ரவரி 2, 1998-க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்)
வயது தளர்வு பற்றிய விவரங்கள் (RBI Assistant Recruitment)
- OBC பிரிவினர் – 3 ஆண்டுகள் (31 வயது வரை)
- SC/ST பிரிவினர் – 5 ஆண்டுகள் (33 வயது வரை)
- PwBD பிரிவினர் – 10 ஆண்டுகள் கூடுதல் வயது வரை
- முன்னாள் ராணுவ வீரர்கள் வயது தளர்வு – 50 வயது வரை
- விவாகரத்து அல்லது கணவன் இழந்து/பிரிந்து வாழும் பெண்கள் வயது தளர்வு – 35 வயது வரை
கல்வித்தகுதி
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (RBI Assistant Recruitment) பட்டப்படிப்பை (Bachelor’s Degree) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
- SC/ST/PwBD பிரிவினருக்கு இந்த குறைந்தபட்ச 50% மதிப்பெண்களில் மேலும் சதவீத தளர்வு ஆனது உண்டு. மேலும் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
- விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் RBI அலுவலகத்தின் உள்ளூர் மொழியைப் பேச, படிக்க மற்றும் எழுதத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
பணியிட ஒதுக்கீடு விவரங்கள்
- பொதுப்பிரிவு – 346,
- EWS – 58,
- OBC – 99,
- SC – 110,
- ST – 37
- மாற்றுத்திறனாளிகள் (PwBD) – 70 இடங்கள்
தேர்வு முறை
- முதல்நிலைத் தேர்வு (Prelims) – ஏப்ரல் 11, 2026. 100 மதிப்பெண்கள் கொண்டது – Reasoning (35), Numerical Ability (35), English Language (30). மொத்தம் 60 நிமிடங்கள்.
- முதன்மைத் தேர்வு (Mains) – ஜூன் 7, 2026, 200 மதிப்பெண்கள் – Reasoning (40), English (40), Numerical Ability (40), General Awareness (40), Computer Knowledge (40). மொத்தம் 135 நிமிடங்கள்.
மொழித் திறன் தேர்வு (LET) – உள்ளூர் மொழி தகுதி (RBI Assistant Recruitment) தேர்வு. பின்னர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
- பொதுப்பிரிவினர் – ரூ.450/-,
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 16 முதல் மார்ச் 8, 2026 வரை சமர்ப்பிக்கலாம்.