RBI Grade B 2024 Notification Out : 94 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியில் (RBI) கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (RBI Grade B 2024 Notification Out) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 94 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.08.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI Grade B 2024 Notification Out :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய ரிசர்வ் வங்கியில் Officers in Grade ‘B’ (DR) பதவிக்கு 66 காலிப்பணியிடங்களும், Officers in Grade ‘B’ (DR) – DEPR பதவிக்கு 21 காலிப்பணியிடங்களும், Officers in Grade ‘B’ (DR) – DSIM பதவிக்கு 7 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 94 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன.
- வயதுத் தகுதி (Age) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு 01.07.2024 அன்று வரை 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (UG) முடித்திருக்க வேண்டும்.
- சம்பளம் (Salary) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.1,22,717/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். மேலும் எழுத்துத் தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2024 ஆகும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ (RBI Grade-B) அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர், OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகும். மேலும் SC/ST, PWD பிரிவினர்களுக்கு ரூ.100 ஆகும்.
- மேலும் விவரங்கள் அறிய :
https://opportunities.rbi.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!