Gistak Media – Cinema News | Trending News | Latest News

RBI Recruitment 2023: மாதம் ரூ. 71,000 சம்பளத்தில் RBI இல் பொறியாளர் வேலை

பொறியியல் படித்தவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) காலியாக உள்ள 35 ஜூனியர் இன்ஜினியர் (சிவில் / எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்

* கலிப்பாணியிடம்: 35 பதவிகள்

* ஜூனியர் இன்ஜினியர்: சிவில், எலக்ட்ரிக்கல்

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.71,032 ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும். அடிப்படை சம்பளமாக ரூ.33,900 முதல் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

* சிவில்: அரசால் அங்ககரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ST, SC, ஆகிய விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 55% மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* எலக்ட்ரிக்கல்: அரசால் அங்ககரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ST, SC, ஆகிய விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 55% மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*அனுபவம்: டிப்ளமோ விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது இரண்டு வருடமாவது அனுபவம் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் https://ibpsonline.ibps.in/rbijemay23/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: தேர்வு முறையானது ஆன்லைன் மூலம் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top