இந்தியாவில் ரிசர்வ் வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்திய நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. தற்போது இந்த ரிசர்வ் வங்கி ஆனது மொத்தமாக 572 அலுவலக உதவியாளர் (RBI Recruitment 2026) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மண்டல வாரியாக 572 பணியிடங்கள்
- சென்னை – 09
- பெங்களூரு – 16
- அகமதாபாத் – 29
- புது டெல்லி – 61
- பாட்னா – 37
- மும்பை – 33
- குவஹாத்தி – 52
- கொல்கத்தா – 90
- போபால் – 04
- புவனேஸ்வர் – 36
- சண்டிகர் – 02
- ஹைதராபாத் – 36
- ஜெய்ப்பூர் – 42
- கான்பூர் மற்றும் லக்னோ – 125
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதிக கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடாது. மேலும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்றாக அறிந்தவராக இருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் எந்த மாநில அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், மற்றும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு குறிப்புக்கள்
- இந்த பணியிடங்களுக்கான வயது வரம்பு18 வயது முதல் 25 வயது ஆகும். அதாவது 01.2001-க்கு முன்பாகவோ மற்றும் 01.01.2008-க்கு பிறகோ பிறந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்.
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்.
- பொதுப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்.
- SC/ST பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள். OBC பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்.
தேர்வு செய்யப்படும் முறை (RBI Recruitment 2026)
- ஆன்லைன் தேர்வு முறை
- மொழித் திறன் தேர்வு முறை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு முறையில், பகுத்தறிவுத் திறன் தேர்வில் – (30 கேள்விகள்), பொது ஆங்கிலம் தேர்வில் – (30 கேள்விகள்), பொது அறிவு தேர்வில் – (30 கேள்விகள்), எண் கணிதத் திறன் தேர்வில் – (30 கேள்விகள்)
தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/குமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய நகரங்களில் (RBI Recruitment 2026) தேர்வு மையங்கள் ஆனது அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
- SC/ST பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- மற்றவர்கள் ரூ.450 செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு RBI அலுவலகத்திற்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஜனவரி 15 முதல் பிப்ரவரி 4 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 04.02.2026 ஆகும்.