RBI Reduced Repo Rate : வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா எதிர்பாராத விதமாக வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.5% ஆக குறைத்து இந்த வட்டி விகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிப்பு (RBI Reduced Repo Rate) வெளியிட்டுள்ளார். மேலும் எஸ்பிஐ குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்திகோஷ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற பொருளாதார வல்லுநர்கள் ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை மட்டுமே குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடன் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி
இந்த 2025-ம் நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ரிசர்வ் வங்கி தற்போது வரை ரெப்போ வட்டி விகிதத்தில் 100 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்ற வங்கிகள் இந்த குறைப்பின் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், வீட்டுக் கடன், வாகனம், EMI-கள் கணிசமாகக் குறையும் என்பதால் கடன் வாங்குபவர்களுக்கு இது நல்ல செய்தியாகும்.
ரெப்போ வட்டி விகிதம் (RBI Reduced Repo Rate)
ரெப்போ விகிதம் என்பது இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதமாகும். மேலும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக நிலையாக 6.50 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதில் 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இதில் மேலும் 0.25 சதவீதம் (RBI Reduced Repo Rate) குறைத்து 6 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெப்போ விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள் கூறுகையில், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், நாம் உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்றும் இன்றைய நாணயக்கொள்கை நடவடிக்கைகள் உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கான ஒரு படியாக பார்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித குறைப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு