RCB Qualified For 2025 IPL Finals : பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆர்சிபி
18வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது (RCB Qualified For 2025 IPL Finals) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஓவரில் ப்ரியன்ஷ் ஆர்யா 7 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்னிலும், பிரப்சிம்ரன் 18 ரன்னிலும், ஜாஸ் இங்கிலீஷ் 4 ரன்னிலும், ஷஷாங் சிங் 3 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 26 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறியதால் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுயாஷ் சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஆர்சிபி அணிக்கு 102 ரன்கள் இலக்கு
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீரரான ஃபில் சால்ட் 27 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் ஆடிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். பிறகு களத்திற்கு வந்த மயங்க் அகர்வால் 19 ரன்னில் வெளியேறியதால், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் உதவியுடன் 10 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
9 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆர்சிபி (RCB Qualified For 2025 IPL Finals)
ஆர்சிபி கடைசியாக 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு 4வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளது. மேலும் 10 ஓவர் (60 பந்துகள்) மீதம் வைத்து அதிக பந்துகள் வித்தியாசத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!