பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 18, 2026-ல் நடந்த Royal Challengers Bangalore vs Delhi Capitals போட்டியில் Delhi Capitals 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது (RCB vs DC IPL 2026 Highlights). இந்த போட்டி ஆனது முழுக்க முழுக்க திருப்பங்களால் நிரம்பிய ஒரு திரில்லர் போட்டியாக அமைந்தது. கடைசி ஓவர் மிகவும் த்ரில்லாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்தது Royal Challengers Bangalore
டாஸ் வென்ற Delhi Capitals பவுலிங் தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்தது Royal Challengers Bangalore அணி. இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அபாரமாக விளையாடி 63 ரன்கள் (38 பந்தில்) மூலம் அதிரடி தொடக்கம் கொடுத்தார். பில் சால்ட் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் எடுத்து 30 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். பில் சால்ட் ஆட்டமிழந்ததை தொடர்ந்து Royal Challengers Bangalore-ன் ரன் வேகம் குறையத் தொடங்கியது. மிடில் ஆர்டர் பெரிய ஸ்கோர் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதாரின் 8 ரன்கள், படிக்கல் 18 ரன்கள், ஜிதேஷ் சர்மாவின் 14 ரன்கள் மற்றும் டிம் டேவிட்டின் (26 ரன்கள்) கைகொடுக்கல. நடுவரிசைச் சரிவு பெரிய தாக்கத்தை தந்தது. அக்ஷர் படேல் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து பெங்களூருவின் ரன் வேகத்தை முடக்கினார். மேலும் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் மற்றும் லுங்கி முறையே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Delhi Capitals பவுலிங் Royal Challengers Bangalore அணியை சிறப்பாக 175 ரன்களில் கட்டுப்படுத்தியது.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கி வெற்றி பெற்ற Delhi Capitals
Delhi Capitals அணி ஆனது 18 ரன்களுக்குள் பாதும் நிசங்கா (1), கருண் நாயர் (5) மற்றும் சமீர் ரிஸ்வி (2) ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ஆரம்பமே பெரும் சோதனையாக அமைந்தது. தனது அபாரமான ஸ்விங் பந்துவீச்சால் Royal Challengers Bangalore அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் Delhi Capitals அணியின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப்பின் 50 ரன்கள் மில்லருக்கு வெற்றியை எளிதாக்கியது. ராகுல் நிதானமாகவும் மற்றும் அதிரடியாகவும் விளையாடி 57 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கடைசி ஓவரில் Delhi Capitals அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. வெற்றிக்கு 4 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தில் டேவிட் மில்லர் ஒரு இமாலய சிக்ஸர் எடுத்தார். மீண்டும் டேவிட் மில்லர் நான்காவது பந்தில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து (RCB vs DC IPL 2026 Highlights) Delhi Capitals அணிக்கு வெற்றியை கொடுத்தார்.
RCB vs DC IPL 2026 Highlights : டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்த ஹீரோ டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.