Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
சமீப காலங்களில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (REITS) சிறந்த செயல்திறன் கொண்ட சொத்து (Real Estate Market Growth) வகுப்பாக உருவாகி வருகின்றன மற்றும் நிலையான வருவாயை வழங்கி வருகின்றன. RERA (ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம்) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற சீர்திருத்தங்கள் இந்த ரியல் எஸ்டேட் துறையை முதலீட்டாளர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும் மற்றும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கி உள்ளது. வேகமாக முன்னேறி வரும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும். பின்வரும் காரணங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது
எக்விரஸ் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட் துறை அதன் மிக வலுவான நிதியைத் திரட்டி உள்ளது. மேலும் அது 12 ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட ரூ.23,080 கோடியை பாதுகாத்து உள்ளது. இது 2017 முதல் இந்திய ரியல் எஸ்டேட் துறை திரட்டிய மிக உயர்ந்த தொகை ஆகும். இந்திய ரியல் எஸ்டேட் துறை அதன் சாத்தியமான வளர்ச்சி வாய்ப்புகளையும் மற்றும் சந்தை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. மேலும் இது வலுவான முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் மூலதன வருகையை வெளிப்படுத்துகிறது. இது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் குடியிருப்பு விற்பனை 77% அதிகரித்துள்ளது
கிராண்ட் தோர்ன்டன் ரியல் எஸ்டேட் அறிக்கையின்படி 2019 நிதியாண்டு முதல் நடப்பு 2025 நிதியாண்டு வரை இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, தெற்கு மெட்ரோ நகரம் டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நம்பமுடியாத அளவிற்கு குடியிருப்பு விற்பனை 77 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹைதராபாத் நகரின் சராசரி குடியிருப்பு சொத்துகளின் மதிப்புகள் ஆனது கடந்த நான்கு ஆண்டுகளில் 80% உயர்வைக் கண்டுள்ளன.
இந்திய ரியல் எஸ்டேட் துறை 2026லும் நிலையான வளர்ச்சியை எதிர்நோக்குகிறது (Real Estate Market Growth)
இந்திய ரியல் எஸ்டேட் துறை வரும் 2026-ல் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கல் காரணமாக, உலகப் பொருளாதாரம் தொடர்பான வர்த்தக பதட்டங்கள், அதிக கடன் நிலைகள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையிலும், ஒரு நிலையான வளர்ச்சியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆனது அதிகரித்து வருகிறது. மக்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற சொத்துக்களில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். முதலீட்டாளர்கள் ரூ.1 கோடிக்கு மேல் விலையுள்ள ஆடம்பர வீடுகளை வாங்க உற்சாகமான வரவேற்பை தருகின்றனர்.
இந்தியா 2025 நிதியாண்டு குறித்து கிராண்ட் தோர்ன்டன் ரியல் எஸ்டேட் அறிக்கை
இந்த 2025 நிதியாண்டில் இந்தியா நம்பமுடியாத அளவிற்கு $6.99 பில்லியன் மதிப்பு உள்ள மொத்தம் 99 ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களைப் பதிவு செய்துள்ளதாக கூறுகிறது. தனியார் பங்கு இதில் கிட்டத்தட்ட $3.15 பில்லியனை எட்டி உள்ளது. ஐபிஓக்கள் மற்றும் தகுதி வாய்ந்த நிறுவன வேலை வாய்ப்புகள் போன்ற பொதுச் சந்தை நடவடிக்கைகள் ஆனது $2.99 பில்லியனை எட்டி உள்ளன. இரண்டாம் நிலை நகரங்கள் என்று கருதப்பட்டு வரும் நகரங்கள் ஆனது முக்கிய குடியிருப்பு மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
ரியல் எஸ்டேட் துறையில் இந்திய வணிகக் குழுக்களின் முதலீடுகள்
ரியல் எஸ்டேட் துறையில் டாடா, பிர்லா, கோத்ரெஜ், ஹீரோ, ஜிண்டால், மஹிந்திரா மற்றும் அதானி போன்ற முக்கிய இந்திய வணிகக் குழுக்கள் தங்களது (Real Estate Market Growth) முதலீடுகளை கணிசமாக அதிகரித்து வருகின்றன. RERA போன்ற ஒழுங்குமுறை சீர்திருத்தங்களால் மேம்பட்ட வெளிப்படைத்தன்மை வலுவான வருவாய்க்கான சாத்தியக்கூறுகளை தருகின்றன. கோவிட்-க்குப் பிந்தைய வளர்ச்சி சாதகமாக உள்ளது. பெரிய நில வங்கிகள் தோன்றி உள்ளன. மேம்பட்ட சந்தை நிலைமைகள் காரணமாக, ரியல் எஸ்டேட் பெருநிறுவனங்களான DLF, Lodha, Prestige Group மற்றும் Sobha Limited போன்றவை ரியல் எஸ்டேட் துறையில் தங்கள் இருப்பையும் முதலீடுகளையும் தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்கள் நம்பகமான பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிக பிரீமியம் செலுத்த தயாராக உள்ளனர். ஸ்ரீராம் குழுமம் மற்றும் லோஹியா குளோபல் குழுமம் போன்ற வையும் கூட இந்தத் துறையில் நுழைய தயாராக உள்ளனர். இந்தக் குழுக்கள் பலப், பல ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட தங்கள் தற்போதைய பெரிய நில வங்கிகளை பணமாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல் பட உள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!