Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று (Realme GT 7T Smartphone Launch On May 27) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு ஆன்லைனில் கசிந்துள்ள இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
Realme GT 7T Smartphone Launch On May 27
1.Realme GT 7T Display
இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போன் 6.8-இன்ச் HD Plus அமோலெட் டிஸ்பிளே மற்றும் 2800 x 1280 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.
2.Realme GT 7T Camera
இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 32MP Sony Ultra லென்ஸ் கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
3.Realme GT 7T Storage
இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் (Realme GT 7T Smartphone Launch On May 27) தெரிவித்துள்ளது. மேலும் ரியல்மி யுஐ 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி போன் விற்பனைக்கு வருகிறது.
4.Realme GT 7T Battery
ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 7000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5.Realme GT 7T Rate
ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி 8GB RAM + 128GB மெமரி கொண்ட வெரியண்ட் ரியல்மி ஜிடி 7டி போன் ரூ.34,999 என்ற விலையிலும், 12GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.37,999 என்ற விலையிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!