Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது
இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Redmi Note 13 Pro Plus ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகும் வேளையில் Redmi Note 13 Pro Plus போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications) :
- Redmi Note 13 Pro Plus Display : Redmi ப்ரோ பிளஸ் போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. மேலும் இதுவொரு 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த ஓஎல்இடி டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட்யுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 3D கர்வ்ட் டிசைன் கொண்டிருப்பதால் புதுவித டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Redmi Note 13 Pro Plus Battery : ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 120W ஹைப்பர் சார்ஜ் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 29 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். சோனி Imx 355 சென்சார் வருகிறது.
- Redmi Note 13 Pro Plus Camera : இந்த போனில் 200MB மெயின் கேமரா மற்றும் சாம்சங் எச்பி3 சென்சார் + 8MB அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா அதோடு ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சார் கொண்ட 2MB மேக்ரோ கேமரா வருகிறது. இதனுடன் 16MB செல்பீ கேமரா சென்சாருடன் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது.
- Redmi Note 13 Pro Plus Storage : ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 8GB RAM + 256GB மெமரி, 12GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 512GB மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வர இருக்கின்றன.
- Redmi Note 13 Pro Plus Colors : ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் ப்யூசன் பிளாக் (Fusion Black) ப்யூசன் வைட் (Fusion White) மற்றும் ப்யூசன் பர்பிள் (Fusion Purple) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
- Redmi Note 13 Pro Plus Rate : இந்த போனின் 8GB RAM + 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999/- ஆகவும் 12GB RAM + 256GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999/- ஆகவும் 12GB RAM + 512GB மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!