பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் வரை மனை, வீடு, விளை நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கினால் பதிவு கட்டணம் 1% சதவீதம் வரை குறைக்கப்படும் என 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு (Registration Fees Reducing For Women) வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உடனடி நடவடிக்கையானது பெண்கள் மத்தியில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நூற்றாண்டு விழா கண்ட தமிழக சட்டப்பேரவை பெண்களின் முன்னேற்றங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அசைய சொத்துக்கள் (Registration Fees Reducing For Women)
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் நோக்கத்தில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள மனை, வீடு, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள் (Registration Fees Reducing For Women) பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளில் 75% பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெறும் எனவும், இதன் மூலம் பெண்களின் சுய சார்பும், பொருளாதார சுதந்திரம் உயர்ந்திடும் எனவும் மகளிர் நலன் காக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதி என பல்வேறு முன்னோடி திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பெண்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட (Registration Fees Reducing For Women) உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் 20% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெற்று பல்வேறு தொழில்களை தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரசாணை வெளியீடு
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அரசாணை (Registration Fees Reducing For Women) வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் புதுச்சேரி மாநிலத்தின் திட்டத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, முத்திரைத் தீர்வை விலக்கு பெற 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்ற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் அவர்களுக்கு முத்திரைத் தீர்வையில் இருந்து 50% விலக்கு அளிக்கும் வகையில் தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.