இந்திய வரலாற்றில் குடியரசு தினம் ஆனது இந்திய நாடு அரசர்களுக்கான நாடு அல்ல, மக்களுக்கே சொந்தமான நாடு என்று ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் (Republic Day 2026) உணர்த்தும் நாள் ஆகும்.
குடியரசு தினத்தின் தோற்றம்
1930-ல் லஹோரில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் முழு சுதந்திர (பூர்ண சுவராஜ்) அறிவிப்புடன் குடியரசு தினத்தின் தோற்றம் தொடங்கியது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்ட வரைவு குழு தலைவராக செயல்பட்டார். நாடு முழுவதும் 1930 ஜனவரி 26 மக்கள் சுதந்திர உறுதிமொழி எடுத்து “பூரண சுதந்திர தினம்” எனக் கொண்டாடினர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமைந்தது. அதன் வரலாற்று (Republic Day 2026) நினைவாக ஜனவரி 26 தேதியே ஜனநாயக குடியரசின் தொடக்க நாளாக மற்றும் குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1946 டிசம்பர் 9 அன்று கூட்டு சபை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அரசமைப்புச் சட்ட அவை-யின் முதல் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவி வகித்தார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947-ல் விடுதலை பெற்றதும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆனது 1949-ல் நவம்பர் 26-ம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பு மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், 1950-ல் ஜனவரி 26-ம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஜனவரி 26-ம் நாள் இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியதை குறிக்கிறது.
குடியரசு தினத்தின் வரலாறு
இந்திய குடியரசின் முதல் அதிபதியாக ராஜந்திர பிரசாத் பதவி ஏற்றார். இர்வின் அம்பிதீட்டரில் (இப்போது உள்ள தேசிய விளையாட்டரங்கத்தில்) முதல் குடியரசு தினம் ஆனது 1950 ஜனவரி 26 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 3000 வீரர்கள் பங்கேற்ற முதல் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சுகார்னோ முக்கிய விருந்தினராக பங்கேற்றார். அந்த தினத்தில், இந்தியாவின் குடிமக்கள் தங்கள் நாடு பெற்ற சுதந்திர அரசியலமைப்பு மற்றும் ஆட்சியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
குடியரசு தினத்தின் முக்கியத்துவம் (Republic Day 2026)
- இந்திய வரலாற்றில் குடியரசு தினம் ஆனது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிறப்பு தினம் ஆகும். இந்தியா ஆனது இந்திய மக்களுக்கே சொந்தமான நாடு என்று ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உணர்த்தும் நாள் (Republic Day 2026) ஆகும். மன்னர் ஆட்சி முழுமையாக முடிவு பெற்று மக்களாட்சி தொடங்கப்பட்ட நாள் ஆகும்.
- இந்த மக்களாட்சியின் தொடக்கம் ஆனது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது உரிமைகளை அறிந்து கொள்ள, தனது கடமைகளை உணர மற்றும் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதி எடுக்க கொள்ள அறிவுறுத்துகிறது.
- 1950 முதல் இந்தியாவின் வெளிநாட்டு நட்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு குடியரசு தினத்திலும் ஒரு வெளிநாட்டு நாட்டின் தலைவர் “Chief Guest” ஆக இந்தியாவிற்கு அழைக்கப்படுகிறார்.
- டெல்லியில் குடியரசுத் தலைவர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்படும்.
- குடியரசு தினத்தையொட்டி நாட்டுக்கு சேவை செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் (பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ), வீர சக்ர விருதுகள் மற்றும் குடிமக்கள் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்திய ராணுவத்தின் வலிமையை வெளிப்படுத்தும், நாட்டின் பாதுகாப்புத் திறனை காட்டும் மற்றும் மாநிலங்களின் கலாச்சார பல்வகைத் தன்மையை வெளிப்படுத்தும் ராஜபாதை (கர்த்தவ்ய பாத்) அணிவகுப்புகள் நடைபெறும். இவற்றில் முக்கியமானவை,
- முப்படை அணிவகுப்புகள் (வான்படை, தரைப்படை, கடற்படை)
- நவீன ஆயுதங்கள், டாங்குகள், மற்றும் ஏவுகணைகளின் அணிவகுப்புகள்.
- மாநிலங்களின் அலங்கார வண்டிகளின் அணிவகுப்புகள்.
- பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளின் அணிவகுப்புகள்.
- விமானப்படையின் வான்வழி காட்சிகள்.
- நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில்,
- கொடி ஏற்றுதல்,
- தேசபக்தி உரைகள்,
- கலாச்சார நிகழ்ச்சிகள்,
- வீரர்களுக்கு விருதுகள் வழங்குதல் குடியரசு தினத்தின் சிறப்பம்சமாக நடத்தப்படும்.