Reserve Bank Grade B Notification 2025 : ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ரிசர்வ் வங்கி இந்திய நாட்டின் கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1935-ம் ஆண்டு 1 கோடி முதலீட்டில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. மேலும் 1949-ம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக (Reserve Bank Grade B Notification 2025) உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Reserve Bank Grade B Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு B (DR) அதிகாரி பணியிடங்களுக்கு 83 பணியிடங்களும், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறை பதவிக்கு 37 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 120 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
ரிசர்வ் வங்கியில் இந்த கிரேடு B (DR) பொது அதிகாரி பணியிடத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிகிரி முடித்து இருக்க வேண்டும் எனவும், பொருளாதாரம் சார்ந்த பணிக்கு நிதி, பொருளியல் சார்ந்த படிப்புகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
ரிசர்வ் வங்கியில் இந்த அதிகாரி பணியிடங்களுக்கு ஜூலை 1, 2025 தேதியின் படி 21 வயது முதல் 30 வயதிற்குள் மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். M.Phil/PhD முடித்தவர்களுக்கு 34 வயது வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
4.சம்பளம் (Salary)
ரிசர்வ் வங்கியில் இந்த கிரேடு B அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு (Reserve Bank Grade B Notification 2025) மாதம் ரூ.55,200/- முதல் ரூ.99,750/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
ரிசர்வ் வங்கியில் இந்த கிரேடு B அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு நேர்முகத்தேர்வு வைத்து அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
ரிசர்வ் வங்கியில் இந்த அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக General/OBC பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
ரிசர்வ் வங்கியில் இந்த கிரேடு B அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!