Gistak Media – Cinema News | Trending News | Latest News

Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், கருணாகரன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் தரமான ட்ரெய்லர் (Retro Movie Trailer Release) வெளியிடப்பட்டுள்ளது. 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரெட்ரோ

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் உருவாகியுள்ளது ‘ரெட்ரோ’ படம். ‘கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, இந்தப் படத்தில் ஆக்‌ஷன் ஜானரில் சூர்யா நடித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக உள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவின் கடைசி படமாக ‘கங்குவா’ வெளியிடப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கிய ‘ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா’ இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் (Retro Movie Trailer Release) தயாரித்தார். இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தப் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. பல ட்ரோல்களைச் சந்தித்த இப்படம் தோல்வியடைந்தது.

Retro Movie Trailer Release - Gistakmedia

ரெட்ரோ ட்ரெய்லர் (Retro Movie Trailer Release)

இதைத் தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தின் பாடல்கள் ஏற்கனவே (Retro Movie Trailer Release) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் பரபரப்பான ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. சூர்யா ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் கலந்து நடித்துள்ளார். வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்ல, வித்தியாசமான பாணியில், ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தில் இருந்து ஏற்கனவே கனிமா பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் சூர்யா இனிமே தான் சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் இருக்கும் என பேசி இருக்கும் வசனம் (Retro Movie Trailer Release) இடம்பெற்றுள்ளது. மேலும், தட்டுனேன் பொளந்துடுச்சு என பேசிகொண்டே ரவுடிகளை வெளுவெளுவென வெளுக்கிறார். இப்போது வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top