Ritika Singh Shares Pic with Rajinikanth: ரஜினிகாந்துடன் நடிகை ரித்திகா சிங்
ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் தற்போது ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். நடிகை ரித்திகா சிங் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில், ரஜினிகாந்துடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் ரஜினியின் காட்சிகள் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. லால் சலாம் ரசிகர்களுக்கு போனஸ் என்றே சொல்ல வேண்டும். ரஜினி ரசிகர்கள் அனைவரும் இப்போது வேட்டையன் படத்தின் அப்டேடிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது ரஜினிகாந்த் த.சே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வேட்டையன் படப்பிடிப்பு (Ritika Singh Shares Pic with Rajinikanth)
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் தொடங்கியது. அதன்பிறகு தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரித்திகா சிங் காயமடைந்தார். கண்ணாடியில் மோதியதில் அவரது உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு ரித்திகா சிங் காயங்களில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்துடன் ஆங்கிலப் பாடலைப் பதிவிட்ட அவர், ரஜினிகாந்துடன் நடிப்பதை தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!