Robo Shankar Passes Away : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.. ரசிகர்கள் சோகம்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு 8.30 மணியளவில் சிகிச்சை (Robo Shankar Passes Away) பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ரோபோ சங்கர் காலமானார்
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் ஆரம்பத்தில் சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் ஸ்டேண்டப் காமெடியனாக மக்களிடம் அறிமுகம் பெற்று, தனியார் சேனலில் நகைச்சுவை ஷோக்களில் தன்னுடைய மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமடைந்தார். தன்னுடைய விடாமுயற்சியால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர் கடந்த 2007-ம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து யாருடா மகேஷ், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவர் விஜயின் புலி, தனுஷின் மாரி, அஜித்தின் விஸ்வாசம் என தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை (Robo Shankar Passes Away) வெளிப்படுத்தினார். மேலும் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவருடைய காமெடி கதாபாத்திரம் இன்றுவரை ரசிகர்களின் விருப்ப கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி (Robo Shankar Passes Away)
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்றுவந்த நடிகர் ரோபோ சங்கர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல்மெலிந்து போனார். அதற்கு என்னுடைய சில கெட்டபழக்கங்கள் காரணம் என்று அவரே தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து மஞ்சள் காமாலை மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சையில் இருந்துவந்தார். தொடர்ந்து காவல் துறை சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியே ரோபோ சங்கர் ‘நான் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டேன். அதற்கு காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கம். இதனால் நான் உங்களுக்கு உதாரணமாக உள்ளேன்’ என்று பேசியிருந்தார். பின்னர் தன்னுடைய உடல்நலன்மீது கவனம் செலுத்திய ரோபோ சங்கர், கொஞ்சம் கொஞ்சமா அந்த பாதிப்பிலிருந்து, மீண்டுவந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்துவந்தார்.
இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பில் ஈடுபட்ட ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்த 46 வயதான நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை (Robo Shankar Passes Away) பலனளிக்காமல் உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து நடிகர்கள், அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!