Rohit Sharma Talks About Pressure : ரசிகர்களின் அழுத்தத்தை கண்டு கொள்ள மாட்டோம்
Rohit Sharma Talks About Pressure :
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி விடுவேன் என்றும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றும் ரோகித் சர்மா (Rohit Sharma Talks About Pressure) தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஷாஹித் 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அபார சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா வெறித்தனமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்த விராட் தனது பங்கிற்கு அரை சதத்தை அடித்தார்.
ஆட்ட நாயகன் :
சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா கூறுகையில், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் உத்வேகம் பெறுவது மிகவும் முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ள அழுத்தத்தை உணர்ந்து அதற்கேற்ப சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்திய அணியில் பல்வேறு திறமைகள் கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வழிகளில் அணிக்கு அனுபவத்தைக் கொண்டு வருகிறார்கள். அதே சமயம், வெவ்வேறு திறன் கொண்ட வீரர்களைக் கொண்டிருப்பது அணியை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்திய அணியில் அச்சமின்றி விளையாடும் வீரர்கள் உள்ளனர். கடந்த போட்டியைப் போல் அழுத்தத்தை உணர்ந்து சிறப்பாக பந்து வீசும் வீரர்கள் உள்ளனர்.
போட்டியைப் பொருத்தவரை பாகிஸ்தான் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் பார்க்கப் போவதில்லை. நம் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்று சிந்திப்போம். அகமதாபாத் மைதானத்தில் ஆடும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் அணி சேர்க்கை என்ன என்பதில் கவனம் செலுத்தலாம். அவை நம் கட்டுப்பாட்டில் உள்ளன. அணியாக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே எங்களது கவனம் உள்ளது என்றார்.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு