Gistak Media

இந்திய கேப்டன்களில் புதிய சாதனை படைத்த Rohit Sharma

இந்திய அணியின் கேப்டன் Rohit Sharma ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த இரண்டு அணிகளும் பார்டர்– கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் மோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது.

பின்னர் மார்னஸீம், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். மார்னஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைதொடரந்து வந்த மட் ரென்ஷா, ரன்கள் எதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். மேலும் ஸ்டீவன் ஸ்மித் 37 ரங்களில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்த அணியானது இன்னிங்சை இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் யாரும் இந்த போட்டியில் சோபிக்கவில்லை ஒருபுறம் விக்கெட்களை இழந்த போது மற்றொருபுறம் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மினஸ் பந்துவீச்சில் அவுட்டானார். டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பேற்ற பின் ரோஹித் சர்மாவின் முதல் சாதமாகும். இந்த சதத்தின் மூலம் அனைத்து வடிவங்களிலும் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். விராட் மற்றும் தோனி டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தது சதமடித்தது கிடையாது. ஆனால் ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் சதமடித்த இந்திய கேப்டன் என வெற்றியை எட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top