Romeo Movie Review: ரோமியோ திரைப்படத்தின் திரை விமர்சனம்
அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, வி.டி.வி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “ரோமியோ”ஆகும். பரத் தனசேகர் இசையமைத்துள்ள இதற்கு பரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தை தற்போது காணலாம்.
படத்தின் மையக்கருத்து
35 வயதாகியும் லவ் ஃபீல் வந்தால்தான் திருமணம் செய்வேம் என சொல்லும் விஜய் ஆண்டனிக்கும் மிருளாணி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் மிருளாலினியின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததை உணர்ந்த விஜய் ஆண்டனிக்கு, அவர் வாழும் நகரத்து வாழ்க்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று கனவு காண்பதாகவும், தன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்வது தவறு என்றும் விவாகரத்து செய்துவிடலாம் என்றும் மிருளாளினி கூறுகிறார். தனது மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதையாகும்.
ரோமியோ திரை விமர்சனம் (Romeo Movie Review)
நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தனது நடிப்பில் “இந்தியா பாகிஸ்தான்” படத்தில் மட்டுமே கலகலப்பான கேரக்டரில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் வித்தியாசமான நடிப்பில் நடித்துள்ளார். ஒரு அமைதியான கிராமத்து பையனாக, ரோமியோவாக படம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார். மிருளாளினி ரவியும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர யோகி பாபு, வி.டி.வி கணேஷ், ஷாரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளன.
சில இடங்களில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சில இடங்களில் இப்படித்தான் நடக்கப் போகிறது என்று யோசிக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. முதல் பாதியில் வரும் திருமணக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் இரண்டும் அருமை. பின்னணி இசை பல இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. கேமரா ஒவ்வொரு காட்சியையும் தனித்து தெரிய வைக்கிறது. முதல் பாதியில் ஆங்காங்கே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அதை கொஞ்சம் குறைக்கலாம். மேலும், படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்க பல காட்சிகளைச் சேர்த்திருப்பது சற்று சொதப்பலாக அமைந்துள்ளது. ட்ரைய்லரை பார்த்து விட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே. ஆனால் இந்த விடுமுறையில் ரோமியோவை உங்கள் குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!