Gistak Media

RRB ALP Recruitment 2026 : இரயில்வே ஜாப் வேண்டுமா? 11,127 லோகோ பைலட் பணியிடங்கள் அறிவிப்பு?

இந்தியன் ரயில்வேயில் 11,127 லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான (RRB ALP Recruitment 2026) அறிவிப்பு ஒன்றை ரயில்வே தேர்வு வாரியம் ஆனது வெளியிட்டுள்ளது. இது சமீப ஆண்டுகளில் ரயில்வே தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப ஆட்சேர்ப்பு அறிவிப்புகளில் ஒன்றாகும். 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.

தேவையான கல்வித் தகுதி

  • விண்ணப்பதரார்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐடிஐ-யும் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  • அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree in Engineering முடித்தவர்களாக  இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதரார்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அரசு விதிகளை பின்பற்றி உள்ள உச்ச வயது தளர்வுகள்
  1. SC/ST பிரிவினர் – 5 ஆண்டுகள்
  2. OBC பிரிவினர் – 3 ஆண்டுகள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு – 10 வருடங்கள்.

மாத சம்பளம் விவரம் (RRB ALP Recruitment 2026)

லோகோ பைலட்களுக்கான மாத சம்பளம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படும்.

RRB ALP Recruitment 2026 - Gistakmedia

தேர்வு முறை விவரங்கள்

சிபிடி (CBT) எனப்படும் கணினி வழி தேர்வு முறையானது பின்பற்றப்படுகிறது. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் கணினி அடிப்படையிலான ஆப்டிடியூட் தேர்வு (CBAT) ஆகிய தேர்வுகளுக்கு (RRB ALP Recruitment 2026) பிறகு ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டண விவரங்கள்

  • விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
  • SC/ST/பெண்கள்/EBC/PwBD பிரிவு விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் RRB-யின் இணையதளமான rrbapply.gov.in இணையவழி மூலம் வரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top