RRB Clerk Notification 2025: இரயில்வேயில் 8,875 டிக்கெட் கிளர்க் வேலை 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இரயில்வேயில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரயில்வேயில் தற்போது (RRB Clerk Notification 2025) காலியாக உள்ள 8,875 டிக்கெட் கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
RRB Clerk Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள டிக்கெட் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கு 2,662 பணியிடங்களும், டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 394 பணியிடங்களும், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டண்ட் பதவிக்கு 921 பணியிடங்களும், சரக்கு ரயில் மேலாளர் பதவிக்கு 3,482 பணியிடங்களும், ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு 615 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 8,875 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்தியன் இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் மேலாளர் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் (RRB Clerk Notification 2025) எனவும், ஜூனியர் கிளார்க், அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிக்கெட் கிளர்க் போன்ற பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்தியன் இரயில்வேயில் பட்டப்படிப்பு தகுதியுள்ள பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின் படி எஸ்சி/எஸ்டி, ஓபிசி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்தியன் இரயில்வேயில் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு 7வது பே கமிஷன் படி மாதம் ரூ.35,400/- வரை சம்பளம் (RRB Clerk Notification 2025) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கான மருத்துவம், போக்குவரத்து செலவு, ஓய்வூதியம் போன்ற பிற சலுகைகளும் வழங்கப்படும் என ஆர்.ஆர்.பி தெரிவித்துள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்தியன் இரயில்வேயில் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் முதற்கட்டமாக 90 நிமிடங்களுக்கு (பொது விழிப்புணர்வு – 40, கணிதவியல் – 30, ரீசனிங் – 30) என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கணினி வழியிலான தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்தியன் இரயில்வேயில் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்தியன் இரயில்வேயில் இந்த டிக்கெட் கிளர்க் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நவம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!