RRB NTPC Notification 2025: இந்தியன் இரயில்வேயில் 5,800 என்.டி.பி.சி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!
இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் (RRB) அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த என்.டி.பி.சி (RRB NTPC Notification 2025) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, கல்வி தகுதி என்ன?, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RRB NTPC Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு இரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் – தட்டச்சர் மற்றும் போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள இந்த என்.டி.பி.சி பணியிடங்களுக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்தியன் இரயில்வேயில் இந்த என்.டி.பி.சி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு (RRB NTPC Notification 2025) மூன்று ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்தியன் இரயில்வேயில் டிக்கெட் சூப்பர்வைசர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு 35,400 ரூபாயும், சரக்கு இரயில் மேலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 29,200 ரூபாயும், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் மற்றும் தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 29,200 ரூபாயும், போக்குவரத்து உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 25,500 ரூபாயும் அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்தியன் இரயில்வேயில் இந்த NTPC பணியிடங்களுக்கான தேர்வு முறையை பொறுத்து வரையில், விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப மற்றும் (RRB NTPC Notification 2025 கல்வித் திறனை மதிப்பிடும் வகையில், கணினி வழியில் CBT தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்தியன் இரயில்வேயில் இந்த NTPC பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.400 ஆகவும், எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்தியன் இரயில்வேயில் இந்த NTPC பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக வரும் நவம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!