Gistak Media

RRB Ntpc Recruitment 2025 : இந்தியன் இரயில்வேயில் 3058 என்டிபிசி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

Indian Railways ஆனது இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3058 கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான (RRB Ntpc Recruitment 2025) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும்.

இந்தியாவில் மிகப்பெரிய அரசு நிறுவனமாக உள்ள ரயில்வே துறையில் பணி செய்ய வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. ரயில்வே துறை ஆனது கைநிறைய சம்பளம், சலுகைகள் என பலவற்றை தகுந்த முறையில் தருகிறது. மொத்தம் 4 வகையான கிளார்க் பணியிடங்கள் ஆனது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு Ticket Clerk (Commercial) – இந்த Commercial Ticket Clerk பிரிவில் அதிகபட்சமாக 2424 காலிப் பணியிடங்கள் உள்ளன. அடிப்படை சம்பளம் ரூ.21,700/- ஆக நிர்ணயக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Junior Clerk & Accounts Clerk – Typist – இந்த இரு வகையான கிளார்க் பணிகளுக்கு தலா 394 மற்றும் 163 காலிப் பணியிடங்கள் உள்ளன. அடிப்படை சம்பளம் ரூ.19,900/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (RRB Ntpc Recruitment 2025) இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் கணினியில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். Trains Clerk – இந்த Trains Clerk பிரிவில் 77 காலிப்பணியிடங்கள் உள்ளன. அடிப்படை சம்பளம் ரூ.19,900/- ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு (RRB Ntpc Recruitment 2025)

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆனது 01.01.2026 அன்றைய நிலவரப்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு ஆனது வழங்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு ஆனது வழங்கப்பட்டுள்ளது.

RRB Ntpc Recruitment 2025 - Gistakmedia

தேர்வு செய்யும் முறை (Selection Process)

கீழ் காணும் 2 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். கணினி வழித் தேர்வு, முதல் நிலை. கணினி வழித் தேர்வு. இரண்டாவது நிலை. இவ்வாறு நடைபெறும் முதல் நிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வில் பங்கேற்கலாம். இறுதியில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் (How to Apply & Application Fee)

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண  விவரங்கள் பின்வருமாறு பொது/OBC/EWS பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/சிறுபான்மையினர் (RRB Ntpc Recruitment 2025) பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் ரூ.250 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க தொடக்க நாள்- 28.10.2025 

விண்ணப்பிக்க இறுதி நாள் – 27.11.2025

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top