-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
RRB Technicians Grade I & III Recruitment : இந்தியன் இரயில்வேயில் 6180 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இரயில்வே துறை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இரயில்வேயில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு (RRB Technicians Grade I & III Recruitment) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி? சம்பளம்? வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.
RRB Technicians Grade I & III Recruitment
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இரயில்வேயில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு I பதவிக்கு 180 பணியிடங்களும், தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு III பதவிக்கு 6000 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 6180 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி (Educational Qualification)
இந்தியன் இரயில்வேயில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு I பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்களும், தொழில்நுட்ப வல்லுநர் (RRB Technicians Grade I & III Recruitment) கிரேடு III பணியிடங்களுக்கு மெட்ரிகுலேஷன், எஸ்.எஸ்.எல்.சி, ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
இரயில்வேயில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு I பதவிக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் மிகாமல் உள்ளவர்களும், தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு III பதவிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary)
இந்தியன் இரயில்வேயில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு I பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.29200 முதல் 92000 வரையும், தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு III பதவிக்கு (RRB Technicians Grade I & III Recruitment) தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.19900 முதல் ரூ.63000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இரயில்வேயில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு கணிணி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
6. விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்த தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 28.07.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!