Gistak Media

RRC SR Recruitment 2024 : 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வே துறையில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு தெற்கு ரயில்வேயில் 10-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2860 காலியிடங்கள் (RRC SR Recruitment 2024) நிரப்பட உள்ளன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெற்கு ரயில்வே துறைக்கு உட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு (RRC SR Recruitment 2024) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RRC SR Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : Machinist, Electrician, Carpenter, Fitter, Turner, Welder, Welder (G&E), Painter, Electronic Mechanic, Wireman, Plumber, Diesel Mechanic, COPA உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மண்டலம் மற்றும் பிரிவு வாரியான காலியிடங்களைத் தெரிந்துக் கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு (RRC SR Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு மட்டும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

  3. சம்பளம் (Salary) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன்  ஊக்கத்தொகையாக  மாதம் ரூ.6000 – 7000/- வரை  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. வயதுத் தகுதி (Age) : 28.02.2024 அன்றுவரை 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு (RRC SR Recruitment 2024) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2024 ஆகும்.

  8. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.100/- ஆனால் SC / ST / PwD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

  9. மேலும் விவரங்களுக்கு : https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top