Run Baby Run 'திரில்லர்' படத்தில் R.J.பாலாஜி
வீட்ல விஷேசம் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாக இருக்கும் படம் “Run Baby Run” பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் படத்தை தயாரித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவானது. படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ஜோ மல்லூரி, தமிழ், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 3 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கதை நாயகனாக நடித்து வருகிறார். கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, முக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்கள் காமெடியாக இருக்கும் ஆனால் ‘ரன் பேபி ரன்’ ஒரு சீரியசான த்ரில்லர் மற்றும் சண்டை காட்சிகள் நிறைந்த படமாகும். அதாவது ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்கையில் ஏற்படும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அந்த அளவிற்கு த்ரில்லாக இருக்கும். இது ஒரு த்ரில்லர் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.






