20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சூப்பர் 8 சுற்றுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி (SA vs NZ Semi Final) சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் மோதுகின்றன. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆனது 8-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னிலை
உலகக் கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 5 முறை மோதி அந்த அனைத்திலும் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆகிய இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வெற்றிபெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது
நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்கா அணி அபார ஃபார்மில் உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரையிலும் எந்த ஒரு தோல்வியையும் தழுவாமல் அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியுளது. இதுவரை 5 போட்டிகளில் நியூசிலாந்தை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
தென்னாப்பிரிக்கா அணி சிறந்த சமநிலையை பெற்றுள்ள அணியாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் மிகப்பெரிய பலமானது
- வலுவான டாப் ஆர்டர் பேட்டிங்
- நடு வரிசை பேட்டிங்
- பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய பந்துவீச்சு
- காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சன் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்த முறை இறுதிப்போட்டிக்குச் செல்ல பொன்னான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அரையிறுதிகளில் அடிக்கடி மின்னும் நியூஸிலாந்து அணி (SA vs NZ Semi Final)
பெரிய போட்டிகளில் நியூஸிலாந்து எப்போதும் பிளான் செய்து அமைதியாக ஆடுவார்கள். அவர்களது பிளான் பல சமயங்களில் வேலை செய்யும். நியூசிலாந்து பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவமும் மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், மற்றும் ஃபின் ஆலன் போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களும் உள்ள அணி ஆகும். பெரிய போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்கும் திறன் அதிகம் பெற்றது நியூஸிலாந்து அணி (SA vs NZ Semi Final) என்பது பலதரப்பட்ட கிரிக்கெட் விமர்சகர்கள் கூறும் கருத்து ஆகும். அமைதியாக, பிளான் பண்ணி, அரையிறுதிகளில் வெற்றி பெற்று அடிக்கடி மின்னும் அணி நியூசிலாந்து அணி ஆகும்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம்
இந்த மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. கொல்கத்தா ஆடுகளம் ரன்களை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர்-ஹிட்டர்கள் இந்த மைதானத்தில் போட்டி இரவில் நடைபெறுவதன் காரணமாக, பனியின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.