Gistak Media

SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஆனது இறுதிப் (SA vs NZ t20) போட்டிக்கு முன்னேறியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை இருக்கைகளின் நுனியில் உட்கார வைத்தது இந்த பரபரப்பான அரையிறுதி மோதல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி ஆனது நல்ல சஸ்பென்ஸ், அதிரடி, மற்றும் உணர்ச்சி ஆகிய அனைத்தையும் வழங்கிய ஒரு மறக்க முடியாத மோதலாக அமைந்தது.

தங்கள் திட்டத்துக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசி செயல்பட்ட நியூஸிலாந்து அணி

கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி தங்கள் திட்டத்துக்கு ஏற்ப பந்து வீச்சை தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ யான்சன் 55-ம், பிரேவிஸ் 34-ம், மற்றும் ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது ஆட்டத்தை இழந்தனர். நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரச்சின் ரவீந்திரா, மெக்கன்ஸி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் (SA vs NZ t20) கைப்பற்றினர். மேலும் நீஷம் மற்றும் ஃபெர்குஸன் தலா 1 விக்கெட் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

வெற்றி நோக்கி களமிறங்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி

டிம் செய்பர்ட் அடித்த அரைசதம் (58 ரன்கள்) தொடக்கம் சிறப்பாக அமைய காரணமாக இருந்தது. ஃபின் ஆலனின் சூறாவளி சதமான 33 பந்துகளில் 100 ஆனது போட்டியின் போக்கையே மாற்றியது. அவரின் கவர் டிரைவ், புல் ஷாட், மற்றும் ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் தாக்குதல்களை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களால் இயலவில்லை.

ஃபின் ஆலன் போட்டியின் நாயகன் (SA vs NZ t20)

ஃபின் ஆலன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், ஒரே தொடரில் 20 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அவர் டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நியூசிலாந்து ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் அடித்த அதிரடி சதம் மற்றும் அரையிறுதி மேடையில் (SA vs NZ t20) அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ் ரசிகர்களை மிகவும் பரவசப்படுத்தியது. இந்த போட்டியில் ஃபின் ஆலனின் அதிரடி ஆட்டம் ஆனது நியூசிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றது. ஃபின் ஆலனின் சதம் அடித்த அதிரடி சதம் ஆனது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பதிவாகியுள்ள அதிவேக சதமாகும். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், மற்றும் 10 பவுண்டரிளுடன் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இது டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிவேக சதமாகப் பதிவாகியுள்ளது.

SA vs NZ t20 - Gistakmedia

ஆலனின் இன்னிங்ஸை உலகம் முழுவதும் பாராட்டி வருகிறது

ஆலனின் ஆட்டம் ஆனது துணிச்சல், துல்லியம் மற்றும் தாக்குதல் ஆகியவற்றின்  சிறந்த கலவையாக இருந்தது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரின் பங்களிப்பான சதம், அதிரடி ஸ்ட்ரைக் ரேட் மற்றும் போட்டியின் போக்கை (SA vs NZ t20) மாற்றிய இன்னிங்ஸ் ஆகியவற்றை பாராட்டியுள்ளனர். ரசிகர்களை கவர்ந்த அவரின் இன்னிங்ஸ் அரையிறுதி வரலாற்றில் சிறந்த இடம் பிடித்துள்ளது.

நியூசிலாந்தின் திடமான திட்டமிடல் இறுதிப்போட்டிக்கு இடம் அளித்தது

பரபரப்பான தொடரின் அரையிறுதி மோதலில், நியூஸிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போது கோப்பையை நோக்கி பயணிக்கும் நியூசிலாந்து அணியின் முக்கிய பலம்

  • அவர்களது அணியின் ஒற்றுமை,
  • அவர்களின் துல்லியமான திட்டம்,
  • அவர்களின் அழுத்தத்தில் அமைதி.

நியூசிலாந்தின் திடமான திட்டமிடல் எப்போதும் அவர்களை வெற்றியை நோக்கி பயணிக்க உதவுகிறது. ஆபத்தான அணியாக மாற்றுகிறது. அரையிறுதி வரலாற்றில் இடம் பிடிக்க வைத்துள்ளது.  வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top