சப்ஜா விதைகள் என்பது இனிப்பு துளசி செடியிலிருந்து பெறப்படும் விதைகள் ஆகும். (Sabja Seeds Benefits in Tamil) இவை இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை மனித உடலுக்கு மிக நல்ல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
100 கிராம் சப்ஜா விதைகளில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள்
100 கிராம் சப்ஜா விதைகளில் ஊட்டச்சத்துகள் பின்வரும் விகிதங்களில் உள்ளன.
- புரதம் (Protein) – 14.8 கிராம் முதல் 20 கிராம் வரை உள்ளது.
- நார்ச்சத்து (Fiber) – 22.6 கிராம் முதல் 34 கிராம் வரை உள்ளது.
- கார்போஹைட்ரேட் – 63.8 கிராம் உள்ளது.
- கால்சியம் – 1770 மி.கி உள்ளது (இது பாலில் உள்ள அளவை விட அதிகம் ஆகும் ).
- மெக்னீசியம் – 31.55 மி.கி முதல் 431 மி.கி வரை உள்ளது.
- இரும்புச்சத்து – 2.27 மி.கி முதல் 7.7 மி.கி வரை உள்ளது.
மேலும், (Sabja Seeds Benefits in Tamil) இதில் வைட்டமின்கள் A, K, C மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
மனித உடலுக்கு குளிர்ச்சி தருகிறது
சப்ஜா விதைகள் வெப்பத்தை உள்வாங்கி உடனடியாகக் குளிர்விக்கும் தன்மை கொண்டவை. அதன் இயற்கையான குளிர்ச்சிப் பண்பு ஆனது மனித உடலின் வெப்பத்தை உள்வாங்கி, உடலை உடனடியாகக் குளிர்விக்க உதவுகிறது. மனிதர்கள் கோடைக்கால வெப்பத்திலிருந்து தப்பிக்க சர்பத், ஃபாலூடா மற்றும் இளநீரில் இவற்றைச் சேர்த்து அருந்தலாம்.
செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வளிக்கிறது
இவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தைப் பலப்படுத்துகிறது. உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுவதால் மலச்சிக்கல் நிவாரணம் தருகிறது.
சப்ஜா விதைகளில் அதிகப்படியான ‘மியூசிலேஜ்’ (Mucilage) உள்ளதால் இவை வயிற்றுப் படலத்தைப் பாதுகாத்து, மற்றும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் (HCL) வீரியத்தைக் குறைக்க உதவுகிறது. சப்ஜா விதைகள் நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வை வழங்கும்.
உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது
சப்ஜா விதைகள் நீரில் ஊறும் சமயத்தில் தனது எடையை விட பல மடங்கு விரிவடைந்து ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. உணவு உட்கொள்வதற்க்கு முன்பாக இவற்றை உட்கொள்ளும் போது வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், அதிகப்படியான உணவு உண்பதைத் தடுக்கிறது. இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது.
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டை மேற்கொள்ள உதவுகிறது
சப்ஜா விதைகள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்படுகின்ற வேகத்தை நன்றாகக் குறைக்கின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க முடிகின்றது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
Sabja Seeds Benefits in Tamil : தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பேண உதவுகிறது
சப்ஜா விதைகள் தோல் பொலிவை அதிகரிக்கின்றன. இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இதற்கு உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப் படுவதால் பருக்கள் மற்றும் முகப்பரு வருவது குறைக்கின்றன.
முடி உதிர்வைக் குறைக்கவும் மற்றும் கூந்தலை வலுவாக்கவும் இவற்றில் உள்ள புரதம், இரும்பு மற்றும் வைட்டமின் K ஆகியவை உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்தை காக்க வல்லது
சப்ஜா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கும் தன்மை கொண்டவை. மேலும் சப்ஜா விதைகளில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
காய்ச்சல் மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகின்றன
சப்ஜா விதைக்கள் இருமல் மற்றும் காய்ச்சலை விரைவில் குணப்படுத்த உதவுகின்றன.
சுவையைக் கூட்ட தயிர் மற்றும் சாலட்களில் சேர்க்கலாம்
தயிர் மற்றும் சாலட்கள் சாப்பிடும் போது சப்ஜா விதைக்களை சேர்த்து சாப்பிடலாம். சப்ஜா விதைக்களை சேர்ப்பதன் மூலம் (Sabja Seeds Benefits in Tamil) சுவை கூடும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.