Sachet Mobile App : ஸ்மார்ட்போன் பயனர்கள் சாச்செட் மொபைல் ஆப்ஸ் கருவியை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்தியாவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கட்டாயம் சாச்செட் ஆப்ஸ் என்ற புதிய மொபைல் ஆப்ஸை (Sachet Mobile App) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த சாச்செட் ஆப்ஸ் என்றால் என்ன? இந்த மொபைல் ஆப்ஸை ஏன் இந்திய மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற முழு தகவல்களை பார்க்கலாம்.
சாச்செட் மொபைல் ஆப்ஸ் (Sachet Mobile App)
வழக்கம் போல் மன் கி பாத் நிகழ்ச்சில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல முக்கியமான தகவல்களை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார். அதில், சாச்செட் ஆப்ஸ் என்ற மொபைல் ஆப்ஸ் ஏன் முக்கியமானது என்பதை பற்றி அவர் எடுத்துரைத்தார். சாச்செட் மொபைல் ஆப்ஸ் என்பது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (National Disaster Management Authority) உருவாக்கப்பட்ட ஒரு தேசிய பேரிடர் எச்சரிக்கை போர்டல் மற்றும் மொபைல் செயலி (Sachet Mobile App) ஆகும். இந்த சாச்செட் மொபைல் ஆப்ஸ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர்கள் தொடர்பாக நிகழ்நேர எச்சரிக்கையை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வரவழைக்கும் மொபைல் கருவியாகும். மேலும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் (Location) இயற்கை பேரிடர் எழும் அபாயம் இருந்தால் உங்களுக்கு உடனே ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பும். இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
Sachet ஆப்ஸை பயன்படுத்துவது எப்படி
இயற்கை பேரிடர்களான கனமழை, சூறாவளி, வெள்ளம், பூகம்பம் போன்ற அனைத்து விதமான பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை இந்த சாச்செட் மொபைல் ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு உடனுக்குடன் அனுப்பும். மேலும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது நீங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற முழு தகவல்களையும் இந்த ஆப்ஸ் (Sachet Mobile App) உங்களுக்கு வழங்கும். ஆண்ட்ராய்டு பயனர்கள் எப்போதும் போல நேரடியாக Google Play Store இலிருந்து இந்த சாச்செட் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து GPS location-னை ON செய்து பயன்படுத்தலாம். ஐபோன் மற்றும் ஐஓஎஸ் பயனர்களாக இருந்தால் Apple App Store இலிருந்து பதிவிறக்கம் செய்து பிறகு GPS location-னை ON செய்து பயன்படுத்தலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!