Sachin Talked About Ashwin : தமிழக வீரர் அஸ்வின் ஆட்டத்தின் கடைசி வரை போராடும் தன்மை உடையவர்
Sachin Talked About Ashwin :
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசி பந்து வரை விடாமல் வெற்றிக்காக போராடும் வீரர் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Talked About Ashwin) தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் :
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போதைய இந்திய அணியில் 2011 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு வீரர்களில் அஸ்வின் ஒருவர். ஆசிய கோப்பை தொடரின் போது அக்சர் படேல் காயம் அடைந்ததால், கடைசி நிமிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
சச்சின் டெண்டுல்கர் :
Sachin Talked About Ashwin : இதன்பிறகு சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் களமிறங்கினார். சுமார் 3000 நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பையில் அறிமுகமானார். சொந்த மண்ணில் அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த போதிலும், ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியை விளிம்பில் வைக்க உதவினார்.
இந்நிலையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அனுபவம் வாய்ந்த வீரர் மட்டுமல்ல, கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடும் வீரர் என்றும் கூறியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை அவரை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அஸ்வினின் அணுகுமுறை சிறப்பானது. ஒரு நல்ல பந்து வீச்சாளராகவும், திறமையான பேட்ஸ்மேனாகவும் அஸ்வினை அதிகம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெறாத நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய ஆடும் பதினொன்றில் அஸ்வின் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு