Sachin Tendulkar The Next Bcci President : பிசிசிஐ-யின் அடுத்த தலைவராகும் சச்சின் டெண்டுல்கர்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் Board of Control for Cricket in India (BCCI) 37வது தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் (Sachin Tendulkar The Next Bcci President) எனவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரிடம் பேச்சுவார்த்தை (Sachin Tendulkar The Next Bcci President )
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) 36வது தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி, 70 வயதின் காரணமாக பதவியில் இருந்து விலகியுள்ளதால், பிசிசிஐ-யின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் பிசிசிஐ-யின் அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நீடிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக டெண்டுல்கரிடம் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு சச்சின் டெண்டுல்கர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என சச்சின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2019-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் 35வது தலைவராக பதவியேற்ற பிறகு, அவரின் தலைமையில் இந்திய அணி புதுப்பிக்கப்பட்ட வேகத்தை பெற்றது. பின்னர் 1983 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியின் நாயகனான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக பதவி வகித்தபோது, இந்திய அணியை மீண்டும் வலுவான பாதைக்கு இழுத்து சென்றார். தற்போது அந்த நிலையை தக்கவைக்க சச்சின் டெண்டுல்கரால் முடியும் என பிசிசிஐ நிர்வாகிகள் (Sachin Tendulkar The Next Bcci President) நம்புகின்றனர். மேலும் பிசிசிஐ-யின் பொருளாளர் பிரப்தேஜ் பாட்டியா மற்றும் பிசிசிஐ-யின் இணை செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் பதவியில் நீடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தலைவர் பதவிக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் நாயக் மற்றும் தற்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை ராஜீவ் சுக்லா மீண்டும் ஐபிஎல் தலைவராகும் பட்சத்தில், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான ராகேஷ் திவாரி பிசிசிஐ-யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என கூறப்படுகிறது. பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!