Sakthi Awards - புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2024
Sakthi Awards - கருணைக்கான சக்தி விருது
புதிய தலைமுறை ஆனது சாதனைத் தமிழர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி (Sakthi Awards) கொள்கிறது. புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஆனது உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை புதிய தலைமுறை கடமையாக கொண்டிருக்கிறது. Sakthi Awards – 10 ஆவது ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழாவில் 31 லட்சம் ஆமைகளைக் காத்த சுப்ரஜா தாரணிக்கு கருணைக்கான சக்தி விருது 2023 ஆனது வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் - ஒரு குறிப்பு
ஆண்டு தோறும் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆனது சாதனைத் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களைக் கொண்டாடும் விதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக,
- தமிழன் விருதுகள்
- சக்தி விருதுகள்
- ஆசிரியர் விருதுகள்
என ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது. சமூகம் தளைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் Sakthi awards வழங்கப்பட்டு வருகின்றன.
- தலைமை
- திறமை
- துணிவு
- புலமை
- கருணை
- வாழ்நாள் சாதனை
என 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆய்ந்து அதிலிருந்து சிறந்தவர்கள் விருதாளர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த 6 பிரிவுகளில் சாதனையாளர்களையும் நம்பிக்கை நட்சத்திரங்களையும் அடையாளம் கண்டு அவர்களை கொண்டாடும் விதமாக தமிழன் விருதுகள் வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆனது கொரோனா காலக்கட்டமான 2 ஆண்டுகளை மட்டும் தவிர்த்து தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த விருது விழா ஆனது 10 ஆவது ஆண்டை எட்டியுள்ளது. புதிய தலைமுறை ஆனது சாதனைத் தமிழர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
17/02/2024 சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் சக்தி விருது விழா
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழில்முறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக 17/02/2024 அன்று சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் மாலை ஆறுமணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் (Sakthi Awards) கலந்துகொள்ள இருக்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுடன் நடக்க இருக்கும் சக்தி விருதுவிழா (Sakthi Awards) 17/02/2024 நாள் நிகழ்ச்சி ஆனது உலக மகளிர் நாள் 08/03/2024 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!