Sakthivelan Congratulates Vijay : நடிகர் விஜய்க்கு விநியோகஸ்தர் சக்திவேலன் வாழ்த்து
கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கடந்த 4 மாதங்களாக தியேட்டர்களுக்கு செல்லாத பல ரசிகர்கள் தற்போது விஜய் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வரும் நிலையில், அந்த படத்தை வாங்கி வெளியிட்டு லாபத்தை பார்த்துள்ள விநியோகஸ்தர் சக்திவேலன் விஜய்யை (Sakthivelan Congratulates Vijay) நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sakthivelan Congratulates Vijay :
இந்த வருடம் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் வசூல் நிலவரம் கேள்விக்குறியாகவே உள்ளது, ஆனால் விஜய்யின் கோட் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படங்கள் எதுவும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்காத நிலையில், மலையாளப் படங்கள் மட்டுமே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து வரும் நிலையில், கில்லி ரீ ரிலீஸாகி இதுவரை 17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் கில்லி 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் சக்திவேலன, கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து மிகப்பெரிய ரோஜா மலையை அவருக்கு அணிவித்து கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றிக்கு (Sakthivelan Congratulates Vijay) தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், இது தான் நல்ல சமயம் என்று நினைத்து அவர், ஒரே ஒரு கோரிக்கை சார் என நடிகர் விஜய்யிடம் சினிமாவை விட்டு முழுவதுமாக விலக வேண்டாம் என கூறியுள்ளார். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க சார், வியாபாரத்துக்காக சொல்லல சார், தியேட்டருக்கு வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பாருங்கள் என்று விஜய்யிடம் கோரிக்கை வைத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய், சினிமாவைத் தாண்டி அரசியலுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியுள்ளார். தளபதி 69 படத்தின் மூலம் சினிமாவுக்கு குட்பை சொல்லப் போவதாக அறிவித்துள்ள நிலையில், விஜய்யை தொடர்ந்து சினிமாவில் வைத்திருக்க திரையுலகம் போராடி வருகிறது. மேலும் கில்லி படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினமும் விநியோகஸ்தர் சக்திவேலனுடன் வந்து விஜய்க்கு (Sakthivelan Congratulates Vijay) நன்றி தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!