Salaar Trailer : பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
KGF இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சலார் படத்தின் ட்ரெய்லர் (Salaar Trailer) வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆபிஸை தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் பிரசாந்த் நீல். இவரது ஆழமான கதையோட்டம் தரமான திரைக்கதை செலவிடப்படும் பொருட்செலவில் தரமான படைப்பை எடுத்து வெற்றி கண்டவர் பிரசாந்த் நீல். பிரபாஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘சலார்’ பிரசாந்த் நீல் தனது அடுத்த படைப்பாக இயக்கி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மலையாள ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Salaar Trailer - சலார் படத்தின் ட்ரெய்லர் :
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் (Salaar Trailer) வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் (Salaar Trailer) மொத்தம் 3.47 நிமிடங்கள் படக்குழுவினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மையக்கருத்து நட்பை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முதலில் ப்ரித்வி ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நண்பர்களாக நடித்துள்ளனர். அதே சமயம் படத்தின் பாதி கதை முடிந்த பின்னர் அதாவது முதல் பாகம் முடியும் போது இருவரும் எதிரிகளாகி விடுகிறார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பிரபாஸின் ரத்தம் சிந்தும் காட்சிகள் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி நடித்துள்ள டங்கி திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில், சலார் படமும் வெளியாவதால் இந்திய சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பதான் மற்றும் ஜவான் படங்களின் மூலம், ஷாருக்கான் இந்த ஆண்டு இரண்டு முறை மாஸ் மகாராஜாவாக இந்திய பாக்ஸ் ஆபிஸில் வலம் வரும் நிலையில், பிரபாஸ் அவரை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார், இது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!